Price: ₹350.00
(as of Apr 19, 2025 11:05:00 UTC – Details)
ராகங்கள் மாறுவதில்ல்லையின் தொடர்ச்சி…
சிறிய டீசர்…
ஒரு ஆணுக்கு பெண்ணை பிடிக்க முதல்ல அவளோட அழகுதான் காரணமா இருக்கு.. அதே ஒரு பெண்ணுக்கு ஆணை பிடிக்க அவனோட நடத்தைதான் காரணமா இருக்கும்.. அந்த இடத்துலதான் நீங்க அவ மனசை ஜெயிச்சு இருக்கணும்..
அவ உங்கள லவ் பண்றது உங்களுக்கு நல்லாவே தெரியும். ஹாஸ்பிடல்ல நாங்க உங்கள பாக்க வந்த போது நீங்க அவகிட்ட பேசுனதிலிருந்து அது அவளுக்கு புரிஞ்சுது..
உங்களுக்கு அவ மேல காதல் எல்லாம் இல்ல என்பது அவளுக்கு நல்லாவே தெரியும. ஆனாலும் அவ உங்க மேல வச்ச காதலை மறக்க முடியாமல் மேலும் மேலும் ஆசையை வளர்த்துக் கொண்டதுதான் இந்த பிரச்சனைக்கு மூல காரணம்.
எனக்கு ஒரு சந்தேகம்? உங்களுக்கு காதல்னாலே பிடிக்காதா? அல்லது ரஞ்சனியை பிடிக்கலையா..?
ரஞ்சனி அழகா இருக்கா.. உங்க மேல அன்பா இருக்கா.. அதுக்கு மேல அவளைப் பிடிக்கணும்னா பழகி பார்த்தா உங்களுக்கு தெரிஞ்சு போகப் போகுது.. அவளோட லவ்வ ஏத்துக்கிட்டு பழகிப் பார்த்து குணம் பிடிக்கலைன்னா நீங்க மறுப்பு தெரிவித்து இருக்கலாம்..
எனக்கு என்னவோ ஆண்கள்தான் பெண்கள் கிட்ட காதலை முதல்ல சொல்லணும்.. பெண்கள் தங்களோட காதலை முதலில் சொன்னா அதற்கு மதிப்பு இருக்காதுன்னு நினைக்கிற கேட்டகிரியோட நீங்க சேர்த்தின்னு நினைக்கிறேன்.
அதனாலதான் ரஞ்சனியோட காதலை உங்களால அக்சப்ட் பண்ண முடியல..”
——————————————-
அவ்வளவு தூரம் உங்களுக்காக வீட்ல போராடி ஹாஸ்பிடல் போய் படுத்து இருக்கான்னு சொல்றேன் அட்லீஸ்ட் ஒரு கர்ட்டஸிக்காகவாவது அவளைப் பற்றி நீங்க விசாரித்து இருக்கலாம்..
பொண்ணுங்கன்னா எப்போதும் இளக்காரமா நினைக்கறதே உங்களுடைய ஆண் வர்க்கத்துக்கு வழக்கமா போச்சு இல்ல..? அவ வந்து உங்ககிட்ட காதலை சொன்னது தான் உங்களுக்கு பிடிக்கல..
இதே ஒரு பையன் காதலிச்சு இருந்தா அந்த பொண்ணுக்கு விருப்பமே இல்லாட்டி கூட சுத்தி சுத்தி வந்து என்னோட காதலை எப்படியாவது ஏத்துக்கோன்னு கெஞ்சி கடைசி வரைக்கும் போராடி அவளை ஏத்துக்க வச்சிட்டு தான் மறு வேலை பார்ப்பீங்க..
ஆனா அதுவே ஒரு பொண்ணுக்கு பிடிச்சி இருந்து சொன்னாலே உங்களுக்கு இளக்காரமா இருக்கும்.. அத மைண்ட் பண்ணாம அவ திரும்ப ரெண்டு மூணு தடவ உங்கள பாக்க வந்தா உங்க மூஞ்ச காட்டுவீங்க.. அதைத்தானே அன்னைக்கு ஹாஸ்பிடல்லேயும், நான் போலீஸ் ஸ்டேஷன்ல பார்க்க வந்த போதும் காட்டுனீங்க..?
ஆனா என்னை பொறுத்த அளவில் நீங்கதான் அன்லக்கி.. ஒரு பையனுக்கு பொண்ணு பிடிச்சிருந்ததுன்னா கல்யாணம் வரைக்கும் துரத்தி துரத்தி லவ் பண்ணிட்டு அவ சொன்னதெல்லாம் கேட்பான்.. அதுக்கப்புறம் நம்மள விட்டு இவ எங்க போக போறாங்கிற அலட்சியத்துல அவளை வேற மாதிரி ட்ரீட் பண்ணுவான்..
ஆனா அதே ஒரு பொண்ணு யாரும் லவ் சொல்லாம தானாகவே ஒருத்தனை லவ் பண்ணுனா அவனுக்காக என்ன வேணா செய்வா.? அது உங்களுக்கு புரியல.. ஓகே தேங்க் யூ.. இவ்வளவு நேரம் எனக்கு பேச அனுமதி கொடுத்ததற்கு..” என்று தன் மனதில் இருந்த கோபத்தை எல்லாம் அவன் முன்னே கொட்டி விட்டு எழுந்தாள்..
——————————————————–
“என்ன விளையாடுறீங்களா..? இப்ப எதுக்கு என்னை உங்க அம்மா கிட்ட கோத்து விடுறீங்க..?” என்று அவள் கேட்ட விதத்தில் தற்போது சிரிப்பது அவனது முறையாயிற்று.
“அதென்ன கோர்த்துவிடறது..?” மீசையை நீவி விட்டுக் கொண்டே புருவத்தை உயர்த்தி சிரிக்காமல் அவன் கேட்க, அவனது நக்கல் புரிந்து “அது இருக்கட்டும், முதல்ல என்ன தைரியத்துல என்னை விரும்புறதா சொல்றீங்க..? நான் உங்களை விரும்புறதா சொன்னேனா..?” என்று கேட்டாள்.
“ஆமா நீதானே இப்ப சொன்ன.. என் கல்யாணத்துக்கு பிறகு என்னோட ஹஸ்பண்ட லவ் பண்ணுவேன்னு. அதான் நான் முதல்ல அப்ளிகேஷன் போட்டுட்டேன்..” சிரிக்காமல் கூறினான்.
“ஹலோ நான் அத கேக்கல..?”
“என்னோட பேரு சாரங்கன். நீ அப்படியே கூப்பிடலாம்..”
“இப்ப ரொம்ப முக்கியம்..!”
“எது..?” அவனது கேலியில் கடுப்பானவள் “ஹலோ..” என்று மீண்டும் பல்லை கடித்து ஆரம்பிக்க..
“சாரங்கன்..” என்று அவன் திரும்பவும் கூறியதில் “சரி, சாரங்கன்..” என்று அழைத்தாள்.
“உங்க அம்மாவுக்கு எங்களைக் கண்டாலே ஆகாது.. இந்த லட்சணத்துல என்னை விரும்பறதா சொல்லி தேவையில்லாத பிரச்சனையை ஏற்படுத்தாதீங்க. உங்க தொம்பி பிரச்சனையை சரி பண்ண நான் தானா கிடைச்சேன்..”
“நீதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க பிரண்ட்ஷிப் பற்றி ஒரு கிளாசே எடுத்த, அதான் பிரண்டுகாக எதுனாலும் செய்வேன்னு நினைச்சுட்டேன்..”
ASIN : B0DM2J75F7
Language : Tamil
File size : 559 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 377 pages