Price: ₹449.00
(as of Jan 28, 2025 17:35:03 UTC – Details)
கிண்டில் வாசக நட்புகளுக்கு அன்பான வணக்கம்!
‘நட்சத்திரா’, என்னுடைய ‘சூர்யோதயம்’ என்ற கதை முடிவில் ஆரம்பித்த கதை.
இதுதான் எஞ்சிய வாழ்வுக்கு என்று எண்ணியிருந்த நேசத்தை உதறி விடுகிறாள் , கல்யாணி. இதன் உச்சமாக, நேசம் கொண்ட சூர்யாவிடம் இருந்து தன் இருப்பையே மறைத்தும் விடுகிறாள். ‘அகால மரணம்’ என்ற போர்வைக்குள் ஆரம்பிக்கிறது, அவள் எஞ்சிய வாழ்வு! அதற்கான தேவை என்ன? அந்தப் போர்வைக்குள்ளான அவள் வாழ்வு என்று நகர்கிறது, இக்கதை. இத்தாலியைக் களமாகக் கொண்டு நகரும் இக்கதை, நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் என்பது நிச்சயம்!
கல்யாணி, டேமியன் மட்டுமன்றி, கதாபாத்திரங்கள் ஒரு ஒருவரும் உங்களை ஒவ்வொரு விதத்தில் கவருவார்கள். ‘சூர்யோதயம்’(சூர்யாவின் வாழ்வில், மனத்தில் நீங்கா இடம் பிடித்த கல்யாணி, விபத்தில் அகாலமாக இறந்த பின்னரான காலப்பகுதியில் ‘சூர்யோதயம்’ கதை நிகழ்ந்திருக்கும். ) மற்றும் ‘மீரா’ கதையின் முதன்மைப்பாத்திரங்கள் இக்கதையில் வந்து போவது மேலதிக இரசிப்பாக இருக்கும்.
உங்கள் வாசிப்பு அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்ள மறந்துவிடாதீர்கள்! கதைக்கான நட்சத்திரங்களை இடவும் தான்!
பிரியங்களுடன்,
ரோசிகஜன்.