Price: ₹170.00
(as of Feb 07, 2025 03:30:45 UTC – Details)
” பாப்பு இங்கே வாடா .இது உன் அத்தான் .தம்பி இது ஜீவிதா .உன் பெரிய மாமா மகள் . ” சௌந்தரம் குழந்தைகளுக்குள் அறிமுகம் செய்வித்தாள் .
” உங்க பேர் என்ன …? ” தன் பாட்டியின் அருகில் உரிமையோடு அமர்ந்திருந்தவனை கொஞ்சம் விருப்பமில்லாமல் பார்த்தபடி கேட்டாள் ஜீவிதா .
அந்த பையனின் முகத்தில் கொஞ்சம் மலர்ச்சி வந்த்து .” உன் பெயர் என்ன …? பாப்புவா …? ”
” இல்லை .என் பெயர் ஜீவிதா …பாப்புன்னு கூப்பிடுவாங்க ”
” என் பெயர் சிவபாலன் …சிவான்னு கூப்பிடுவாங்க …”
” ஓ …பாட்டி அடிக்கடி உங்களைத்தான் சொல்லிட்டே இருப்பாங்களா …? ”
” என்னையா …அப்படியா பாட்டி …? ”
” இல்லடா தம்பி .நான் அடிக்கடி சிவ ..சிவான்னு சொல்வேன்.அதை சொல்கிறாள் இவள்.என்னைப் பார்த்து இவளும் சிவ …சிவான்னு சொல்ல பழகி வைத்திருக்கிறாள் ….” தனது பழக்கமொன்றை பழகி வைத்திருந்த பேத்தியின் மேல் பெருமை சௌந்தரத்திற்கு .
“பாப்பு நான் சொல்றது அந்த கடவுள் சிவனை .இவன் என் பேரன் சிவா .நீ இனிமேல் சிவ …சிவா சொல்லக் கூடாது தெரியுமா …? ”
” எதற்கு பாட்டி …? ”
” இங்கே பார் உன் அத்தானின் பெயரையே நீ சொன்னால் மரியாதையாக இருக்காதே .அவன் உன்னை விட ஆறு வயது பெரியவன் .”
இதை கேட்டதும் சிவபாலன் மென்மையாக புன்னகைக்க , அப்போது அவன் முகத்தை பார்த்த ஜீவிதா மலர்ந்தாள் .
” ஐ …நீங்க சிரிக்கும் போது இங்கே குழி விழுதே …” எட்டி அவன் கன்னத்து குழியை தொட்டாள் .
ASIN : B07L7L3QD5
Language : Tamil
File size : 646 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 223 pages