Price: ₹449.00
(as of Mar 09, 2025 04:00:09 UTC – Details)
அலுவலகம் சென்ற துளசிக்கு, கடைசியில் பார்த்த விஜய்யின் சலனமற்ற பார்வை மட்டுமே மனதில் நின்றது. எந்த வேலையையும் அவளால் செய்ய முடியவில்லை. எதைத் தொட்டாலும் அந்த பார்வை மட்டுமே அவள் கண் முன் வந்து, அவளைப் பாடாய் படுத்தியது.
“இந்த விஷ்வ துளசி உனக்கு அவ்வளவு இளக்காரமா போயிட்டேன் இல்லையா..? நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா..? எனக்குன்னு ஆசைகள் இருக்கவே கூடாதா..?” என்று மனம் போன போக்கில் யோசித்தவளுக்கு, இறுதியில் தெரிந்ததும் அந்த பார்வை தான்.
‘என்ன இருந்தது அந்த பார்வையில்..? என்னை ஏற்றுக் கொள் என்றா..? இல்லை, எனக்கு நீ தேவையில்லை என்றா..? இல்லை எனக்கு யாருமே தேவையில்லை என்றா..?’ என்று தனக்குள் யோசிக்க, கண்களை மூடி, மீண்டும் மீண்டும் அவன் பார்வையை மனதிற்குள் கொண்டு வந்தாள்.
‘அந்த கண்களில் தெரிந்த வலிக்கு காரணம் யார்..? நானா..? நிச்சயம் இல்லை. என்ன இது எங்க சுத்துனாலும் மறுபடியும் அவனை சுத்தியே நிக்குது மனசு..!’ என்று நொந்தவள்,
“இப்படியே இருந்தா கதைக்கு ஆகாது. மீட்டிங்குக்கு தேவையானதைப் பண்ணுவோம்..!” என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வந்தான் பிரவீண்.
அந்த நேரத்தில், அவர்களுடைய அலுவலகத்தில் சத்தியமாய் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை இருவரும்.
“என்னாச்சு விஜய்..? ஏதும் பிரச்சனையா..?” என்றான் பிரவீண் பதட்டத்துடன். அவன் கவலை அவனுக்கு.
“பிரச்சனை தான்..!” என்றான் உக்கிரமாய் பார்த்தபடி.
“என்னாச்சு..?” என்றான் பிரவீண்.விஜய்யோ அவன் கேள்வியைப் பொருட்படுத்தாது, வேகமாய் துளசியின் அருகில் சென்றவன், அவள் கழுத்தோடு இறுக்கிப் பிடித்து, சுவரோடு சாய்த்தான்.
“விஜய் என்ன பண்ற..? விடு அவளை..!” என்ற பிரவீணின் குரலை விஜய் சட்டை செய்ததாக தெரியவில்லை.
“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..? மனசுல பெரிய இவன்னு நினைப்பா..! நானும் போனாப் போகுதுன்னு பொறுமையாப் போனா, ரொம்பத்தான் ஆடுற…!” என்றான் அனலைக் கக்கிய விழிகளுடன்.
“என்னாச்சு விஜய்..? என்னன்னு சொல்லித் தொலையேண்டா..! முதல்ல அவ கழுத்தை விடு..” என்றான் பிரவீண்.
துளசியோ எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள். ஆனால் முகத்தில் மட்டும் அப்படி ஒரு வெறுப்பு. அவன் கைகளை கஷ்ட்டப்பட்டு பிரித்தவள்…அவனைத் தள்ளி விட்டாள்.
“ஆமா..! நான் பெரிய இவதான்..இப்ப என்னாங்குற..?” என்றாள்.
“ஏய்..! வேண்டாம்.வார்த்தையை அளந்து பேசிக்க..”
“அதைத்தான் நானும் சொல்றேன்..! நீயும் பார்த்துப் பேசிக்க. இல்லைன்னா பல்லைத் தட்டி கையில குடுத்துடுவேன்..!” என்றான் திமிராக.
“தட்டித்தான் பாருடி..!” என்று விஜய் எகிற,
“போடா..!” என்றாள் பட்டென்று.
“ரெண்டு பேரும் நிறுத்துறிங்ளா…?” என்றவன்,
“நீ சொல்லு விஜய்..!” என்றான்.
“வித்யா அத்தை பேர்ல நம்ம கம்பெனில இருக்க ஷேர்ஸ் எதுவும் தேவையில்லை. அப்படி பிச்சை வாங்கி பிழைக்கிற அவசியம் எங்களுக்கு இல்லைன்னு..மேடம் லீகல் நோட்டிஸ் விட்டிருக்காங்க..! நாங்க எங்க அத்தைக்கு செய்றது பிச்சை போடுறதா..? இல்லை என் அப்பா அவர் தங்கச்சிக்கு செய்றது பிச்சை ஆகுமா…? என்ன நினச்சு இப்படிப் பண்றா உன் தங்கச்சி..!” என்று கோபத்தில் நிதானம் இழந்து கொண்டிருந்தான் விஜய்.
பிரவீணுக்கு அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
“என்ன துளசி இதெல்லாம்..? விஜய் சொல்றது உண்மையா..?” என்றான் துளசியிடம்.
“ஆமா..! எங்கப்பா சொத்தே இவ்வளவு இருக்கும் போது, இவங்க கிட்ட இருந்து கிடைக்கிற எதுவும் தேவையில்லைன்னு தோணுச்சு..!” என்றாள்.
“அதை நீ சொல்லக் கூடாது..! என் அத்தை சொல்லணும்..!” என்றான் விஜய்.
“அவங்க என் அம்மா..! அவங்களுக்குப் பின்னாடி எங்களுக்குத் தான். அதனால.. அது வேணுமா, இல்லை வேண்டாமான்னு நாங்களும் முடிவு பண்ணலாம்..!” என்றாள் அவளும் அதே கோபத்துடன்.
“ஹோ..! நாளைக்கு உன் அண்ணன் உனக்கு ஏதாவது கொடுத்தாலும் அது பிச்சை தான், இல்லையா..?” என்றான் விஜய் நக்கலாய்.
“விஜய்..!!” என்று கத்தினாள் துளசி.
“சும்மா எதுக்கு கத்துற..? உனக்கு வந்தாத்தான் ரத்தமா..? இனிமேல் இப்படி ஏதாவது சில்லித் தனமான வேலையை செஞ்ச…அப்பறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..!” என்றான்.
“இப்ப மட்டும் நீ என்ன மனுஷனாவா இருக்க..?” என்று நக்கல் அடிக்க,
“ஏதும் பேசாத துளசி. நீ செஞ்சது தப்பு..! இது அம்மா முடிவு பண்ண வேண்டிய விஷயம். நாம இல்லை..!” என்றான் பிரவீண்.
ASIN : B0CD87FBNR
Language : Tamil
File size : 443 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 436 pages