
Price: ₹250.00
(as of Sep 27, 2025 02:54:21 UTC – Details)

Anti hero story…….. தன் அறையின் சுவற்றில் சாய்ந்திருந்த கலைமலருக்கு மூச்சு வாங்கியது. ஆழ்ந்து மூச்செடுத்துவிட்டவள் மெல்ல நிதானத்திற்கு வர அப்போது தான் மார்பின் வலியை உணரவே ஆரம்பித்தாள். நேரம் செல்ல செல்ல வலியின் அளவு அதிகரிக்க, மார்பில் மெல்ல கைவைத்து அழுத்தி கொடுத்தவளுக்கு வலியில் தன்னால் கண்கள் கலங்க ஆரம்பித்தது. அதோடு ஒருவித அவமான உணர்வும் சேர்ந்துகொள்ள விசும்ப ஆரம்பித்தாள் பெண்.
“நல்லா இருங்க” என்று சுகுணா சொல்ல, “சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டு குடும்பம் பிள்ளைகுட்டினு சந்தோஷமா வாழணும்” என்று சந்திரசேகர் வாழ்த்த, நன்றி சொல்லியபடி எழுந்தவன் அவர்களிடம் சுவீட் பாக்ஸ் ஒன்றை கொடுக்க, தயங்கியபடி அதை வாங்கினார் சுகுணா.
“இது உங்க பொண்ணுக்கு ஆன்ட்டி” என்று ராகவ் ஒரு சாக்லேட் டப்பாவை நீட்ட, “நீங்களே அதை பாப்பாகிட்ட குடுங்க தம்பி” என்று சொன்ன சந்திரசேகர், “மலர்… அம்மா மலர்…” என்று மகளை அழைக்க, அவளும் தயங்கியபடி வெளியில் வர,
அவள் பக்கம் அந்த சாக்லேட் டப்பாவை நீட்டினான் ராகவ்.
வாங்கவில்லை பெண்.
“மலர், நம்ம அப்பாவ காப்பாத்தினாரே, அவர் தான் இவர். நம்ம வீட்டு மாடிக்கு குடி வந்திருக்கார். தம்பிக்கு இன்னைக்கு பொறந்த நாளாம், அதான் சாக்லேட் குடுக்குறாங்க வாங்கிக்கம்மா” என்று சந்திரசேகர் சொல்ல,
தன் முன் சாக்லேட்டை நீட்டியபடி நின்றவனை, அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. காலையில் நடந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்தே சின்னவள் மீண்டு வரவில்லை. அன்று மாலையே மீண்டும் அவனை நேருக்கு நேர் பார்க்கவேண்டிய சூழ்நிலை.
இப்படி ஒருவன் தன் வீட்டிற்குள் இருந்து வருவான் என்று அவள் என்ன கனவா கண்டாள். அவளின் இயல்பாய், எப்போதும் போல துள்ளி குதித்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தவள் சற்றும் எதிர்பார்க்காமலே அவன்மீது மோதி இருந்தாள். சின்ன பெண்ணுக்கு அதை ஒரு விபத்தாக எடுத்துக்கொள்ள தெரியவில்லை. குற்றவுணர்ச்சி அவமானத்தில் கலங்கி போயிருந்தவளுக்கு இந்த சூழலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் முகம் கறுத்து இருண்டு போனது.
“தேங்க்ஸ்” என்றுவிட்டு, அந்த சாக்லேட்டை வாங்கிக் கொண்டவள், “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என தலை குனிந்தபடி சொல்லிவிட்டு அப்படியே அங்கிருந்து நகர்ந்திருந்தாள்.
அன்றைய நாளுக்கு பிறகு ராகவ் பெரிதாக அவள் கண்ணில் படவில்லை. அதுவே அவளுக்கு அப்படி ஒரு நிம்மதியை கொடுக்க, மெல்ல இயல்புக்கு திரும்ப ஆரம்பித்தாள் கலைமலர்.
***
“அத்தை” என்று அழைத்தபடி கதிர் வீட்டிற்குள் வர,
“வா கதிர்” என்று அவனை அழைத்த சுகுணா, “காபி குடிப்பா” என்று அவனை உபசரிக்க,
“இருக்கட்டும் அத்தை, நான் இப்பதான் சாப்டு வந்தேன். ரெடியா அத்தை, மாமா கெளம்பிட்டாங்களா, போலாமா?”
“ம்ம்… ரெடி ப்பா, போலாம்” என்று சொன்ன சுகுணா, “மலர்…” என்று மகளை அழைக்க,
வெளியில் வந்தவள் கதிரை பார்த்து வெட்கத்துடன் சிரித்தபடி, “வாங்க” என்று அவனை அழைக்க, “ம்ம்… வரேன்” என்றவன் முகத்திலும் புன்னகை.
“மலர் நாங்க ஆஸ்பிட்டல் போயிட்டு வரோம், அப்பாவுக்கு ஸ்கேன் பண்ணனும் சொல்லி இருக்காங்க. நாங்க வர நேரம் ஆகும். நீ பத்திரமா இரு.” என்று சொன்னவர் மேலே இருக்கும் ஆபத்தை பற்றி யோசிக்க மறந்து கணவனை அழைத்துக் கொண்டு, கதிருடன் மருத்துவமனைக்கு கிளம்பி இருந்தார்.
சந்திரசேகரை போல் இல்லை சுகுணா, தெளிவானவர். எதையும் ஒருமுறைக்கு, இருமுறை யோசனை செய்பவர். அவர் ராகவ் மீது எப்போதும் ஒரு பார்வை வைத்தபடி தான் இருந்தார். அவன் அந்த வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றது. அவன் மாடியில் இருப்பதே தெரியாது. மாடிக்கு செல்ல உள்பக்கமும் ஒரு வழி உண்டு. அதே போல் வீட்டின் பக்கவாட்டிலும் ஒருவழி உண்டு.
முதல் நாள் வீட்டிற்குள் இருக்கும் வழியை உபயோகித்தவன், அதற்கு பிறகு வெளியில் இருக்கும் வழியை தான் பயன்படுத்தி வருகிறான். அவசியம் இருந்தாலே தவிர, அநாவசியமாக வீட்டிற்குள் கூட வரவில்லை. அவன் செயலில் நடத்தையில் அத்தனை கண்ணியம். அதனால் அவனை பற்றி யாருக்கும் எந்த பயமும் வரவில்லை.
அதோடு, கலைமலர் மறந்தும் ராகவ்வை மீண்டும் பார்த்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க, எல்லாம் சரியாக சென்றதால், சுகுணா பயமின்றி மகளை தனியாக விட்டு சென்றார். ஆனால் அவருக்கு தெரியாது, தன் குடும்பத்தை கருவறுக்கத்தான் அவன் இத்தனை நல்லவனாக நடந்து கொள்கிறான் என்பது.
***
ASIN : B0F28144VY
Language : Tamil
File size : 1.2 MB
Simultaneous device usage : Unlimited
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 172 pages
Best Sellers Rank: #1,939 in Kindle Store (See Top 100 in Kindle Store) #75 in Fantasy Romance eBooks #90 in Fantasy, Futuristic & Ghost Romance #143 in Fantasy Romance (Books)
Customer Reviews: 4.1 4.1 out of 5 stars 230 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
