Price: ₹449.00
(as of Feb 07, 2025 23:48:57 UTC – Details)
யுனிவர்சின் அடிப்படை ஆதாரமே நிலம், நீர், காற்று, மழை, ஆகாயம் – என்ற பஞ்ச பூதங்கள்தான். அந்த பஞ்ச பூதங்கள் இணைந்து ஒரு காதலை சேர்த்துவைத்தால்… ? என்ற கேள்விக்கான பதில்தான் நம் காதல் கதைக்களம்… மற்றதை கதையின் போக்கில் தெரிந்து கொள்ளுங்கள்.
டீசர்:
கேஸ் ஃபைலை தன் மார்போடு அணைத்தவாறு அவனை அவள் நிமிர்ந்து பார்க்க, அவனோ தன் கூர்மையான பார்வைகளாலேயே அவளை எடை போட்டு கொண்டிருந்தான்.
முகத்தை மறைக்கும் அளவிற்கு பெரிதாக இருந்தது அவள் அணிந்திருந்த வட்டவடிவ கண்ணாடி. எந்தவித ஒப்பனைகளும் இல்லை என்பது அவள் முகத்தைப்பார்க்கும் போதே நன்றாக தெரிந்தது.
திருத்தப்படாத ஐபுரோவிற்கு கீழ் இருந்த அவளின் கண்களைச்சுற்றி கருவளையம் கருமையாக படர்ந்திருந்தது. அவளின் இதழ்கள் கூட ஜீவனே இல்லாமல் உலர்ந்து காய்ந்து போயிருந்தது.
எண்ணெய் வைத்து நன்றாக வாரி இறுக்கமாக அவள் கொண்டை போட்டிருக்க, ‘இந்த நவநாகரீக உலகில் இப்படியும் ஒரு பெண்ணா’ என்ற நினைத்தவனின் இதழோரத்தில் ஏளனப்புன்னகை எட்டிப்பார்த்தது.
அவளின் மெலிந்த கறுத்த மேனிக்கு சற்றும் பொறுத்தமில்லாமல் இருந்தது அவள் அணிந்திருந்த கசங்கிய காலர் வைத்த பெரிய அளவிலான அந்த முழுக்கை சுடிதார். அந்த சுடிதாரின் மேல் மங்களான வெள்ளை நிறத்தில் ஆங்காங்கே அழுக்கு தெரியும் கோட் அணிந்திருந்தவளின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அவர்கள் மருத்துவமனையின் டேக்-கை புருவம் இடுங்கி பார்த்தவன்,
“யார் நீ..? இங்க என்ன பண்ற..?” என்றான் சற்றே அழுத்தமான குரலில்,
அவள் வாயைத்திறப்பதற்கு முன்பே அவள் அருகில் வந்து நின்ற மீராவோ “எக்ஸ்கியூஸ்மீ சார்… இவங்க டாக்டர் யாழினி.. கார்டியோ சர்ஜன். நியூ ஜாயினிங். ஜாயின் பண்ணி ஒன் வீக்தான் ஆகுது” என்று சொல்ல, தன் பார்வையாலே அவளை அடக்கினான் யாதவ்.
மீராவும் அதே மருத்துவமனையில்தான் தோல் சிகிச்சை மருத்துவராக பணியாற்றி வருகிறாள்.
அவளின் வார்த்தையை நம்பாமல் யாழினியின் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையை அவன் எடுத்துப்பார்க்க, இதை சற்றும் அவனிடம் எதிர்ப்பார்க்காத யாழினோ பயத்தில் ஒரு எட்டு பின்னுக்கு நகர்ந்தாள்.
கணப்பொழுதில் அதிலிருந்த விவரங்களை படித்துமுடித்தவன், “டாக்டர். யாழினி” என்று ஏளனமாக உதட்டை பிதுக்கியவன்,
“இந்த ஹாஸ்பிட்டல்ல பாத்ரூம் கழுவ கூட இலாயிக்கு இல்லாத நீ டாக்டரா..? உன் மூஞ்ச நீ கண்ணாடியில பார்த்து இருக்கியா..? டிஸ்கஸ்டிங்” என்றவாறு தலையை இருப்புறமும் ஆட்டி அவன் முகம் சுளிக்க அவளோ அவனை நிமிர்ந்து நேருக்கு நேராய் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“டாக்டர்-அ பார்த்தாலே பேஷண்ட்-க்கு பாதி நோய் கியூர் ஆகணும். ஆனா உன்னப் பார்த்தா…” என்று அவள் முகத்திற்கு முன் கை நீட்டியவன், “நல்லா இருக்கறவன் கூட நேர போய் மார்சுரில படுத்துக்குவான். இந்த மூஞ்சி ஆப்ரேஷன் பண்ணி உயிர் பிழைக்கறதுக்கு சாகறது எவ்வளவோ மேல்” என்று ஏளனமாக அவன் சொல்ல அவன் கூறியதைக்கேட்டு அவர்களை சுற்றி நின்றுக்கொண்டிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர். ஆனால் யாழினியோ அவனின் உருவக்கேலியையோ, தன்னைப்பார்த்து நகைப்பவர்களையோ ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளாமல் அவனையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருந்தாள். இதுக்கூட ஆத்விக்கிடமிருந்து அவள் கற்றுக்கொண்டது தானே.
அவன் தன்னை கேவலப்படுத்தயபோதும் கண்களில் சிறிதும் பயமில்லாமல் அவன் கண்களை நேருக்கு நேராய் அவள் பார்த்திருக்க, அதுவே யாதவிற்கு மேலும் கோவத்தை கூட்டியது.
“ஹே யூ சாரி கேளு” என்றவன் முகத்தை கடுகடுவென வைத்துக்கொண்டு சொல்ல,
“நா..ன் ஏ..” என்றவள் ஆரம்பிக்கும்போதே மேற்கொண்டு அவளை பேசவிடாமல் மீரா அவள் கரத்தைப்பற்றி அழுத்த, அதேநேரம் கூட்டம் கூடியிருப்பதை பார்த்து அந்த மருத்துவமனையின் ஹெ.ச்.ஆர் மூச்சி வாங்க ஓடிவந்து அவன் முன் நின்று சல்யூட் அடித்ததோடு, “சார் ஏதும் பிரச்சனையா..?” என்று வினவ,
“வாட் த ஹெல் ஈஸ் ஹேப்பனிங் ஹியர்” என்று கோவத்தில் கத்தியேவிட்டான் யாதவ்.
அவன் எதற்காக இந்த அளவிற்கு கோவப்படுகிறான் என்று புரியாமல் “சார்…” என்று அவன் இழுக்க,
“யாரக்கேட்டு இந்த மாதிரியான மூஞ்ச எல்லாம் வேலைக்கு சேர்த்தீங்க..?” என்று கண்களில் கோவத்துடன் யாதவ் கேட்க,
“சார் டீன்தான்..” என்றவனை மேற்கொண்டு பேசவிடாமல் இருவிரல் உயர்த்தி தடுத்தவன், “நோ மோர் எக்ஸ்கியூஸ்.. இந்த மூஞ்ச இனி நான் இந்த ஹாஸ்பிட்டல்-ல பார்க்கவே கூடாது. ஃபையர் ஹெர்” என்று கர்ஜித்தவாறு, அருவெருப்பை உமிழும் பார்வையை அவள் மீது செலுத்தியவன் வர்ஷாவியின் இடையை தன்னோடு அணைத்தவாறு அங்கிருந்து நகர்ந்து செல்ல, மீராவோ யாழினியின் கரத்தை பற்றி இழுத்து வந்து தன்னுடைய கேபினில் அவளை அமரவைத்தாள்.
ASIN : B0CVFV8DFS
Language : Tamil
File size : 1235 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 594 pages
Customers say
Customers praise the book for its beautiful love story that shows the truth of love. They appreciate the well-written and narrated story.
AI-generated from the text of customer reviews