Price: ₹49.00
(as of Apr 26, 2025 08:18:20 UTC – Details)
“மெல்லத் தமிழ் இனிச் சாடும்” என்றானே பாரதி. அதை மெய்யாகத் திட்டமிட்டு மெல்ல மெல்ல டெல்லி விஷத்தை டெலிவிஷன் மூலம் பாய்ச்சித் (Slow Poisoning) தமிழைக் கொன்று வருகிறார்கள். தமிழரை அடிமைகளாக “அங்கீகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வானொலியின் நிகழ்ச்சிகளே தமிழருக்காகப் பெரும்பாலும் இருப்பதில்லை; இப்போதோ நிகழ்ச்சித் தலைப்புகளே கூட “வாத்திய விருந்தா” போல மாறி வரும் போக்குத் தென்படுகிறது. – சில பாங்குகள் தவிர அரசுடைமையாக்கப்பட்ட பெரும்பாலான பாங்குகளிலும், ஸ்டேட் பாங்கிலும் பெயர்ப் பலகைகள் மேலே தமிழிலும், கீழே ஆங்கிலத்திலும்-ஆக இருமொழிகளில் மட்டுமே இருந்தன. அண்மைக்காலமாக அவை அகற்றப்பட்டு இடையிலே இந்தியில் எழுதப்பட்ட மும்மொழிப் பெயர்ப்பலகைகள் இடம் பெற்றிருக்கின்றன. பாங்குகளில் வேலைக்கான தேர்வுகளும், CAIIB என்ற பாங்கு ஊழியர்களின் பதவி உயர்வை நிர்ணயிக்கிற தேர்வும் சென்ற ஆண்டிலிருந்து இந்தியிலும் எழுதலாம் என்று அறிவித்து விட்டார்கள்.
அஞ்சல் நிலையம், பாங்குக் கிளைகள், மத்திய அரசு நிறுவனங்கள் போன்றவற்றில் குறைந்தபட்சம் இத்தனை சதவீதப்பணிகள் இந்தியில் நடந்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் அரசு ஆணைகள் வந்து விட்டன.
மத்திய அரசு மானியம் பெறும் நிறுவனங்களும் தங்கள் பணியைக் குறிப்பிட்ட அளவு இந்தியில் நடத்தியாக வேண்டும் : இல்லையேல் மானியத் தகுதியை இழப்பர் என்று ஆணை வந்திருக்கிறது (தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதைத்திரும்ப பெறப்பட்டதாகச் சொல்லப் பட்டது)
இந்த அளவு இந்தி வெறியைக் காட்டும் திமிர் நடவடிக்கைகளுக்குக் காரணம் என்ன? அண்மையில், இந்தியாவை வெள்ளையர் கைப்பற்றிய நோக்கம் பற்றி ஆராய்ந்த அறிஞர்கள் சிலர் ஒரு ஆய்வுக் கருத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
வணிகநோக்கம் எதுவும் வெள்ளையருக்கு முதன்மையாக இல்லை. நாடு பிடிக்கும் எண்ணமே – அரசியல் ஆதிக்கத்தை வளர்க்கும் எண்ணமே முதன்மைக் குறிக்கோள் ஆகும். ஆனால் அதை மறைத்து தங்களுக்கு வணிக வரிவு நோக்கம் இருப்பது போலக் காட்ட கிழக்கு இந்தியக் கம்பெனியை ஒரு உருமாற்றாகப் (Camoflauge) பயன்படுத்தினார்கள். இதற்கான எழுத்து மூல ஆதாரங்கள் அண்மையில் கிடைத்தன.
ASIN : B0D124Q69S
Publisher : THIRUVALLUVAR POTHGA ILLAM; 1st edition (6 May 2024)
Language : Tamil
File size : 286 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 62 pages