எனக்காக பொறந்த எனதழகே! (Tamil Edition)

#amazon ebooks for kindle unlimited, #amazon kindle ebooks, #amazon.in/ebooks kindle, #can kindle tablets be used to access indian ebooks and audiobooks, #chatgptʼ free kindle ebooks, #ebooks jeffrey archer kindle version, #ebooks kindle cart, #ebooks kindle free for prime, #ebooks kindle free for prime in tamil, #ebooks kindle free novel series, #ebooks kindle innovate and thrive jyoti yadav, #ebooks kindle karachi to malabar an odyssey of love, #ebooks kindle the golden road, #ebooks kindle the psychology of money, #ebooks kindle unlimited, #ebooks kindle verity, #ebooks kindle vortex, #free kindle ebooks download, #free kindle law ebooks, #gujarati kindle ebooks, #kindle ebooks by anupama jeremiah, #kindle ebooks english, #kindle ebooks english free, #kindle ebooks for free, #kindle ebooks for free tamil, #kindle ebooks for kids, #kindle ebooks free with prime, #kindle ebooks hindi, #kindle ebooks hyperspace, #kindle ebooks in hindi, #kindle ebooks in kindle store, #kindle ebooks in kindle store free, #kindle ebooks in kindle store tamil, #kindle ebooks kids, #kindle ebooks marathi, #kindle ebooks on indian cooking, #kindle ebooks reader, #kindle ebooks store, #kindle ebooks suppandi, #kindle ebooks tamil, #kindle ebooks tamil free books, #kindle ebooks wild with you, #kindle edition free ebooks hindi love story, #kindle edition free ebooks john grisham, #kindle free ebooks tamil novels, #kindle free tamil ebooks romances ahila issac novels akila ishak, #kindle unlimited free ebooks, #tamil kindle ebooks jiya

எனக்காக பொறந்த எனதழகே! (Tamil Edition)
Price: ₹499.00
(as of Feb 04, 2025 07:02:50 UTC – Details)



“நான் மாப்பிள்ளை வீட்டிலிருந்து மாப்பிள்ளையோட தங்கச்சி பேசறேன்ங்க. எங்க அண்ணன்னுக்குத்தான்… உங்களை பொண்ணு பாத்துருக்கோம். உங்க வீட்டுல உங்க ஃபோட்டோவை கொடுத்தாக. ஃபோட்டோவை பாத்ததும், உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. குறிப்பா எங்க அண்ணனுக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் தேன்மொழி.

மஹாவோ மறுபக்கம் யோசித்தவாறு இருந்தாள். வசீகரன் கான்பரன்ஸ் காலில் அவள் பேசுவதை கேட்க காத்திருந்தான் வசீகரன்.

“உங்க வீட்டுலையும் எங்க அண்ணன் ஃபோட்டோவை பாத்துட்டு கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னாக. அவகத்தான் உங்க ஃபோன் நம்பரையும் கொடுத்தாக. எங்க அண்ணன் உங்ககிட்ட பேசணுமாம். அதுக்கு முன்னாடி நான்… அண்ணிகிட்ட பேசறேனு உங்களுக்கு ஃபோன் போட்டேன்ங்க” என்று சிரிக்காமல் பேசினாள் தேன்மொழி.

“எ…ன்ன? எங்க வீட்ல என் நம்பர் உங்களுக்குக் கொடுத்தாகளா?” என்று சந்தேகத்துடனும், ஆச்சரியத்துடனும் மறுபக்கம் கேட்டாள் மஹா.

“ஆமாங்க அண்ணி. நான் உங்களை அண்ணினு கூப்பிடலாம்ங்களா?”

“எனக்கு வீட்ல நம்பர் கொடுத்தது தெரியாது. நான் அப்புறம் பேசறேன்” என்று தயங்கினாள் மஹா.

“என்ன அண்ணி, நான் எம்புட்டு ஆசையா உங்ககிட்ட பேசறேன். நீங்க என்ன இப்படி சொல்றீக? வேணும்னா என் அண்ணன்கிட்ட பேசுறீகளா?”

“அய்யோ வேணாங்க”

“என் அண்ணனைப் பத்தி நானே சொல்றேன் அண்ணி. கண்டிப்பா உங்களுக்கு அவகளை பிடிக்கும். அவகளை பத்தி முழுசா தெரிஞ்சவுடனே நீங்களே அவககிட்ட பேச அம்புட்டு துடிப்பீக”

‘அய்யோ யாரு இது? அம்மா என்கிட்ட கேக்காம எப்படி நம்பர் கொடுத்தாக’ என்று அன்னையை மனதிற்குள் திட்டிவிட்டு, “ஐ எம் சாரீங்க நான்… ஃபோனை வைக்கறேன். எனக்கு யார்கிட்டையும் பேச விருப்பமில்ல” என்றாள் மஹா.

“ஏன் நீங்க யாரையாச்சும் விரும்புறீகளா? பரவாயில்லைங்க எதுனாலும் என்கிட்ட தயங்காம சொல்லுங்க”

வசீகரன் ஆர்வமாக தன் காதுகளை தீட்டிக் கொண்டான்.

“ஆமாங்க நீங்க வேற ஒரு பொண்ணை உங்க அண்ணனுக்கு கட்டி வைங்க. நான் ஃபோனை வைக்கறேன்”

“ஹலோ ஹலோ ஃபோனை வச்சிடாதீக. என் அண்ணனைச் சுத்துபட்டி ஊருக்கே தெரியும். அவகளை தெரியாதவக இந்த ஊர்லையே கெடையாது. அம்புட்டு பிரபலமானவக. அவகளை கட்டிக்க நானு… நீயினு பொண்ணுங்க போட்டி போடுவாக. அப்படிபட்டவக உங்களுக்குப் புருஷனா கெடைக்க நீங்கத்தான் கொடுத்து வச்சிருக்கணும். ஆனா… நீங்களோ… என் அண்ணனைப் பத்தி தெரிஞ்சுக்காமலே ஃபோனை வைக்கறதில்லையே குறியா இருக்கீகளே” எனக் கேட்டாள்.

“ஹலோ உங்க அண்ணன் யாரா இருந்தா எனக்கென்ன? எனக்கு உங்க அண்ணனைக் கட்டிக்க விருப்பமில்ல”

வசீகரனோ, அவளது பதிலில் சந்தோஷத்தில் ஏதோ வானில் பறப்பது போல உணர்ந்தான்.

“எங்க அண்ணன் பெயரு வசீகரன். பெயருக்கு ஏத்தமாதிரி ஆளும் பாக்க நல்லா வசீகரமா அழகா இருப்பாக. இன்னும் அவகளை பத்தி சொல்றேன் நீங்க கொஞ்சம் கோபபடாம கேளுங்க”

வசீகரன் பெயரைக் கேட்டதும் மஹா அதிர்ச்சியானாள்.

“எங்க அண்ணனை நாங்க நேர்ல பாத்தீங்கன்னா அப்படியே அவக அழகுல சொக்கிருவீக” என்றாள்.

“நீங்க யாரு” என்று தயங்கிய படி கேட்டாள் மஹா.

“அண்ணன் பெயரைக் கேட்டதுமே சொக்கி போய்ட்டீகளா?”

“நீங்க யாரு சொல்லுங்க?”

“நான்… வசீகரன் அண்ணனோட ஒரே ஒரு தங்கச்சி தேனு பேசறேன். உங்களுக்கு எங்க அண்ணனைக் கட்டிக்க சம்மதமா இல்லையா???” எனக் கேட்டுவிட்டு சிரித்தாள்.

“ஏய் குட்டச்சி நீயா? உன்னை இரு… நேர்ல வந்து கவனிக்கறேன்” என்றாள் மஹா.

அவள் இதே போன்று தன்னிடம் கலகலப்பாக பேசினால் நன்றாக இருக்கும் என்று மனதிற்குள் ஏங்கினான் வசீகரன்.

“நீங்க ஒன்னும் என்னை கவனிக்க வேணா, எங்க அண்ணனைக் கவனிங்க அண்ணி”

“என்னம்மா வாய் பேசற? இருடி என் அண்ணன்கிட்ட உன்னை சொல்றேன்” பொய்யாக தேன்மொழியை மிரட்டினாள் மஹா.

“நீங்க உங்க அண்ணன்கிட்ட என்னை பத்தி கம்ப்ளைன்ட் பண்ணா, நான் எங்க அண்ணன்கிட்ட உங்களை சொல்றேன்”

“நான் உங்க அண்ணன்கிட்டையே, உங்க தங்கச்சி இப்படிலாம் பேசறா என்னென்னு கேளுங்கனு சொல்றேன்”

“யாரு நீங்களா? எங்க அண்ணன் அங்க நடந்து வந்தா, அவக அழகுல மயங்கி உங்களுக்குப் பேச்சே வராது. நீங்களா அவககிட்ட பேச போறீக”

“உன்னை நேர்ல பாத்து கொடுக்கறதை கொடுத்தாத்தான் நீ வாய் பேச மாட்டடி. உன் வருங்கால அண்ணினு என்மேல உனக்குப் பயமே இல்லாம போச்சு” என்றாள் மிரட்டும் தோணியில் மஹா.

தேன்மொழிக்கு அவள் வருங்கால அண்ணி என்றால், தனக்கு அவள் மனைவிதானே என்று அவளது பேச்சில், மகிழ்ச்சி அடைந்தான் வசீகரன்.

இக்கதை பற்றி உங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.

ASIN ‏ : ‎ B08CZJ49D3
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 1394 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 12 pages