எனக்கான எனதுயிரே இதயமே நீ (Tamil Edition)

#amazon ebooks for kindle unlimited, #amazon kindle ebooks, #amazon.in/ebooks kindle, #can kindle tablets be used to access indian ebooks and audiobooks, #chatgptʼ free kindle ebooks, #ebooks jeffrey archer kindle version, #ebooks kindle cart, #ebooks kindle free for prime, #ebooks kindle free for prime in tamil, #ebooks kindle free novel series, #ebooks kindle innovate and thrive jyoti yadav, #ebooks kindle karachi to malabar an odyssey of love, #ebooks kindle the golden road, #ebooks kindle the psychology of money, #ebooks kindle unlimited, #ebooks kindle verity, #ebooks kindle vortex, #free kindle ebooks download, #free kindle law ebooks, #gujarati kindle ebooks, #kindle ebooks by anupama jeremiah, #kindle ebooks english, #kindle ebooks english free, #kindle ebooks for free, #kindle ebooks for free tamil, #kindle ebooks for kids, #kindle ebooks free with prime, #kindle ebooks hindi, #kindle ebooks hyperspace, #kindle ebooks in hindi, #kindle ebooks in kindle store, #kindle ebooks in kindle store free, #kindle ebooks in kindle store tamil, #kindle ebooks kids, #kindle ebooks marathi, #kindle ebooks on indian cooking, #kindle ebooks reader, #kindle ebooks store, #kindle ebooks suppandi, #kindle ebooks tamil, #kindle ebooks tamil free books, #kindle ebooks wild with you, #kindle edition free ebooks hindi love story, #kindle edition free ebooks john grisham, #kindle free ebooks tamil novels, #kindle free tamil ebooks romances ahila issac novels akila ishak, #kindle unlimited free ebooks, #tamil kindle ebooks jiya

எனக்கான எனதுயிரே இதயமே நீ (Tamil Edition)
Price: ₹265.00
(as of Apr 20, 2025 11:12:41 UTC – Details)



வணக்கம் நண்பர்களே

அவளை வெகு நாட்களுக்கு பிறகு அவன் சந்திக்கிறான்..அவள் கண்களில் கலக்கம், பயம் எப்போதும் போல நிறைந்து இருந்தது.. அவனுடைய கருப்பு நிற ஜாகுவாரில் சாய்ந்தபடி அதே நக்கலான பார்வையோடு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்..

அவன் சிகரெட்டை எடுத்து பற்ற வைக்கிறான் எனில் அவளை அவனுடைய வளைக்குள் கொண்டு வர போகிறான் என அர்த்தம் அதை புரிந்த அவளோ அவன் வளைக்குள் சிக்க கூடாது என எண்ணி அவன் உன்னை தன் பதட்டத்தை வெளிப்படுத்தாமல் அவள் நின்று கொண்டு இருந்தாள்..

அதை கவனித்து கொண்டே, “அப்புறம் எப்படி இருக்க?” என அவளின் தலை முடி முதல் அவளின் ஒவ்வொரு அங்கமாக நிதானமாக அவன் அவளை அளவிட்டான்..சில இடத்தில் பார்வை விசேஷமாகவும் பரவ, அதை பார்த்த அவளுக்கு முகத்தில் செம்மை படர்ந்தது..உடனே சரியாக இருந்த உடையை மீண்டும் அவள் சரி செய்தாள்..அதை எண்ணி அவளுக்கே அசிங்கமாக இருந்தது..

தான் ஏன் இவன் முன்னால் இப்படி இருக்கிறோம் என அவள் நினைத்தாள்..அவனோ அதை கவனித்து கொண்டே நக்கலாக சிறிது ஒரு பப்பை இழுத்து விட்டான்.. அந்தப் புகையோ வட்ட வட்டமாக சுருள் சுருளாக வெளியே வந்தது..

அதை கவனித்த அவள் தன்னை எண்ணி நொந்து,”நான் எப்படி இருந்தா உனக்கு என்ன?” என கோபமாக கேட்டாள்..

“எனக்கு என்னவா ஒரு வேளை நீ நல்லா இல்லாமல் போய் நான் ரொம்ப கழிச்சு வேற உன்னை பார்க்கிறேன் திடீர்னு மச்சானுக்கு மூடு வந்ததுன்னு வை அதை தாங்கிக்க உனக்கு உடம்புல தெம்பு வேண்டாமா அதான் கேட்டேன்” என்றான் நக்கலாக

“எப்போவுமே இப்படி காஜியா தான் பேசுவியா? வேற எதை பத்தியும் பேச மாட்டியா? போட்டு இருக்கிற வேஷத்தை நினைச்சு கொஞ்சமாச்சும் நல்லவனா இரு” என அவன் பேசியதை கேட்டு அவள் கொந்தளித்து கேட்டாள்..

அதை கேட்டவன், “போட்டு இருக்கிற வேஷத்தை நான் காப்பாத்திக்கிறேன்.. நீ அத பத்தி கவலைப்படாத அப்புறம் என்ன சொன்ன நான் காஜியா? ஆமாம் இத்தனை நாள் காஜியா தான் இருந்தேன்.. இப்போ கொஞ்ச வருஷமா தான் ராமனா இருக்கேன் அதுவும் உன் விசயத்தில் மட்டும்..நான் என்ன பேசினாலும் அது எந்த அர்த்தத்தில் பேசுறேனு உணக்கு தெளிவா தெரியுதுல அது எனக்கு போதும் உன்கிட்ட பேச எனக்கு எந்த ஒளிவு மறைவும் இல்லை.. தாராளமா பேச மட்டும் இல்லை செயல்ல கூட நான் இறங்குவேன் அதுக்கு முழு உரிமை எனக்கு மட்டும்தான் இருக்கு” என கூற அதை கேட்டவள் உள்ளம் படபடக்க துவங்கியது.. அவன் பேச்சை கேட்டு அவளின் உள்ளம் ஒரு நொடி அதிர்ந்தது என்றுதான் கூற வேண்டும்…

“இதோ பார் உனக்கும் எனக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.. தேவையில்லாமல் பேசாத.. எனக்கு புள்ள வேணும்” என தன் தேவையை அவனிடம் கூற,

அதை கேட்டவன் அதே நக்கலோடு, “சரி தரேன் வா சிங்கிள் ஷாட்டா? டபிள் ஷாட்டா? எனக்கு இருக்கிற ஆத்திரத்துக்கு உன்னை நல்லா…. ” என்றவன் நிறுத்த அவன் எதை பேசுகிறான் என்பதை புரிந்தும் ஐயோ இவனிடம் இப்படி போய் வாயை விட்டுவிட்டோமே என்ற நினைத்து அவள், “நான் சொன்னது என் மகளை எனக்கு வேணும்னு சொன்னேன்” என அழுத்தி அவள் கூறினாள்.. அவன் பேசியதுமே அவனின் ஆவேசத்தை உணர்ந்த அவளுக்கு ஏதாவது செய்து விடுவானா என்ற பயம் வேறு உள்ளுக்குள் இருந்தது அதனால் கடுமையாக பேசினாள்..

அவனோ அதுவரை இருந்த இலகு தன்மை போய், “புரியல” என்றான் நொடி பொழுதில் அவனுடைய முகம் அழுத்தமாகியது..

“எனக்கு என் பொண்ணு வேணும்” என அவளும் கூற,

அவனோ,”வேணும்னா சொல்லு அடுத்த பத்து மாசத்துல தர முயற்சி செய்யறேன்..ஆனால் என் பொண்ணை நினைச்சு பார்க்க கூட உனக்கு உரிமை இல்லை” என்றான்..அதை கேட்டவள் திகைத்தாள்… அந்த குழந்தைக்கு, “அது எப்படி நீ சொல்லலாம் அவளுக்கு நான் அம்மா” என்க

“அப்படியா இதை என்கிட்ட சொல்றதுக்கு முன்னாடி முதலில் கண்ணாடியில் நீயே சொல்லி பார்த்திட்டு வந்து என்கிட்ட சொல்லு” என்றவன் பேச்சு முடிந்தது என எண்ணி கிளம்பி சென்று விட்டான்..அவளுக்கோ அவன் கூறியதின் உள் அர்த்தம் புரிந்து கண்கள் கலங்கியது..

ASIN ‏ : ‎ B0DY6N7CP7
Language ‏ : ‎ Tamil
File size ‏ : ‎ 896 KB
Text-to-Speech ‏ : ‎ Not enabled
Screen Reader ‏ : ‎ Supported
Enhanced typesetting ‏ : ‎ Enabled
Word Wise ‏ : ‎ Not Enabled
Print length ‏ : ‎ 301 pages