Price: ₹327.00
(as of Dec 18, 2024 12:48:57 UTC – Details)
“என் பையனை பற்றி உனக்கென்ன கவலை நந்தினி, ஏதோ நீயே பத்து மாசம் சுமந்தவள் மாதிரி பேசுற?” என்று ஏளனமாக உதட்டை வளைத்தப்படி வார்த்தையால் காயப்படுத்தினான். அவன் சொற்கள் ஆயிரம் ஈட்டிகள் ஒன்றாக பாய்ந்தது போல் தாக்கி உயிர் வலியை தருவிக்க விக்கித்துப் போனாள்!
“வி..க்..ர..ம்.. நீ..ங்..க.. நீங்..களா.. இப்..படி.. பேசு..றீங்க..?” திக்கித் திணறியவளின் பிசிறடித்த வார்த்தைகளை மொழிந்தவளின் அடிபட்ட பார்வை, அவனை ஆயுதமில்லாமல் தாக்கியதில், அவன் நெஞ்சமும் அடிபட்டு சுருண்டு போக, தன் உணர்ச்சிகளை மறைக்க போராடி தோற்றவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
***********************************
நந்தினி அங்கிருந்து புறப்பட்டதும் தான் விக்ரம் மகனை தேடி வந்திருக்க, தளர்ந்த நடையுடன் செல்லும் நந்தினியை அடையாளம் கண்டுவிட்டு…
“ஹய் அப்பா! நந்தினி ம்மா” என்றுவிட்டு அவன் சுதாரித்து அவனை கட்டுபடுத்துவதற்குள்…
“நந்தினி ம்மா” என்று கூவிவிட்டிருந்தான். விக்ரம் சடுதியில் மகனின் வாயை தன் கரங்களால் பொத்திவிட்டு, அவனை பார்வையால் கண்டித்து அடக்கிக் கொண்டிருந்த போது தான், ஆதனின் குரல் நந்தினியின் செவியை தீண்டி சுற்றும் முற்றும் பார்வையால் தேடியதை கண்டு ஆதனை பிடித்தபடி விக்ரம் இருளில் மறைந்துக் கொண்டான்.
ASIN : B0BCL7WNPF
Language : Tamil
File size : 1486 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 422 pages