Price: ₹250.00
(as of Apr 14, 2025 09:30:47 UTC – Details)
“காதல்ல முன் அனுபவம் ஏதாவது இருக்கா உங்களுக்கு.” எனக் கேட்டவனைப் புரியாமல் பார்க்க,
“ஐ மீன், லவ்வை விலை குடுத்து வாங்க முடியாது. கால வரையறைக்குள்ள அடக்க முடியாதுன்னு ஃபீல் பண்ணிப் பேசுனீங்களே, அதான் கேட்டேன்” என்றான்.
“செத்தா தான் சுடுகாடு தெரியுமா என்ன? தெரிஞ்சவங்க செத்தாக் கூட புதைக்கச் சுடுகாட்டுக்குப் போவோம் தான. அந்த மாதிரி தான் இதுவும்!” காட்டத்துடன் கிருபாஷிணி கூறியதில் கரத்தை மேலே தூக்கியவன், “ஐ ஆம் சரண்டர்” என்றான் பவ்யமாக.
அவனது செயலில் விழித்துப் பின் சிரித்து விட்டாள்.
“டைம் ஆச்சு கிளம்புறேன்.” என எழுந்தவளோடு அவனும் எழுந்தான்.
“அப்போ மறுபடியும் ஒரு ‘ஆட்’ குடுக்கணுமா?”
அவன் மந்தகாசப் புன்னகை வீசி, “வேணாங்க, நீங்க சொன்ன மாதிரி டைம் வேஸ்ட் தான்.” என ஒப்புக் கொண்டவனை நிம்மதியுடன் ஏறிட்டவள், “ஹப்பாடா, இப்பவாவது புரிஞ்சுதே சந்தோஷம்!” என்றாள்.
அவளுடன் நடந்தபடியே, “அப்புறம் சொல்ல மறந்துட்டேன். இந்த வாரம் உங்க மேகஸின் மறுபடியும் பேக் டூ ஃபார்ம் வந்துருக்கு. வெரி இன்ட்ரஸ்டிங் டாபிக்ஸ். கன்டென்ட்ஸை சூப்பரா சூஸ் பண்ணிருக்கீங்க” என மனதாரப் பாராட்டினான் வம்சி.
மலர்ந்த புன்னகை வீசியவள், “தேங்க் யூ!” எனத் தலை சாய்த்துக் கூற, அவள் மீது படிந்த சுவாரஸ்யப் பார்வையை அதிகப்படுத்தியவன், “நான் ஒன்னு கேட்டா என்னை ஈவ் டீசிங்ல புடிச்சுக் குடுத்துட மாட்டீங்களே.” எனப் பீடிகையுடன் ஆரம்பித்தான்.
“அது நீங்க கேட்குறதைப் பொறுத்து!”
“அப்போ வேணாம், விட்டுருங்க.”
“எதுவோ கேட்க வந்துட்டு நிறுத்திட்டா என்ன அர்த்தம் வம்சி. என்ன? உங்களுக்காக நானே பொண்ணை இன்டர்வியூ பண்ணனுமா?”
“ம்ஹும், அந்தப் பொண்ணே நீங்களா இருந்தா நல்லா இருக்கும்!” எனப் பட்டென உரைத்து விட்டவனைக் கண்டு திகைத்து நின்றவள் விழி வழியே நெருப்பை உமிழ்ந்தாள்.
“என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க? உங்களை மாதிரிப் பொழுது போகாம கான்ட்ராக்டுக்கு லவ் பண்ற பைத்தியம்னு நினைச்சுட்டீங்களா? இல்ல, நீங்க என்ன சொன்னாலும் ஈஈ ன்னு இளிச்சுட்டு பின்னாடி வந்துடுவேனா? இன்னொரு தடவை என் முன்னாடி வந்தீங்க, மரியாதை கெட்டுடும்.” எனப் பற்களை நறநறவெனக் கடித்துத் தீயாகச் சுட்டாள்.
காரில் ஏறி அமர்ந்ததும், இருவரும் ஒன்றும் பேசாமல் பயணித்தனர்.
ஜாஸ்மின் பிளேவரில் பாவையின் மீதிருந்து வந்த பெர்பியூம் வாசம் ஆடவனின் நுண்ணிய உணர்வுகளை எல்லாம் சோதித்துக் கொண்டு இருக்க, அமைதியாகத் தன்னை அடக்கிக் கொண்டிருந்தான்.
“இந்த ட்ரெஸ்ல நான் அவ்ளோ மோசமாவா இருக்கேன். திரும்பிப் பார்க்கக் கூட பிடிக்காத அளவுக்கு…” உர்ரென்ற முகத்துடன் கிருபாஷிணி முணுமுணுக்க, முதலில் புரியாமல் பார்த்தவன் புரிந்தபின் காரை ஓரம் கட்டினான்.
“என்ன சொன்ன?” கண்ணைச் சுருக்கி அவன் மீண்டும் வினவ,
“ம்ம்ம்… இந்த ட்ரெஸ்ல நான்…” எனக் கடுப்புடன் அவள் ஆரம்பிக்க,
அவளது பின்னந்தலைக் கூந்தலைக் கொத்தாகப் பற்றித் தன் புறம் இழுத்தவன், ஸ்ட்ராபெர்ரி நிறத்தில் உதட்டுச் சாயம் பூசி இருந்த உதடுகளை ஒற்றை விரலால் அழுத்தமாக வருடி விட்டு, “தேவதை மாதிரி… ம்ம்ஹும், தேவதையே நீ தான்டி. என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ற.” என மோகத்துடன் கூறி விட்டு அழுத்தம் திருத்தமாகத் தன்னிதழ்களை அவளிதழ்களோடு பொருத்தினான்.
ஆழமாய் தாபமாய் தாகம் தணிக்க, அவளது உமிழ்நீர் கொண்டு தன்னைத் தணித்துக் கொள்ள முற்பட்டவனுக்குத் தாகம் மட்டும் தீர்ந்த பாடில்லை.
ஏற்கனவே அவன் சொன்ன ‘டி’ யில் சிலிர்த்திருந்தவள், இந்த முத்தத்தில் மொத்தத்தையும் மறந்து போனாள். உயிரின் ஆழம் வரை வருடி, நெருடி விட்டது அம்முத்தம்.
எத்தனை நிமிடங்கள் நீடித்தது என்று தெரியவில்லை. உதடு வலித்த பிறகே, அவனைத் தள்ளி விட்டாள்.
கன்றிச் சிவந்து போன இதழ்களை ரசனையுடன் ஏறிட்டவன், “லிப்ஸ்டிக் வச்சு இருக்கியா?” எனக் கேட்க, அவனை நிமிர்ந்து பார்க்கக் கூச்சம் கொண்டு தலையை மட்டும் ஆட்டினாள்.
“குடு!” முத்தம் கொடுத்து விட்டுச் சம்பந்தமின்றிப் பேசியவனை மெல்ல நிமிர்ந்து பார்த்தவள், அவனது கண்ணில் வழிந்த மோகம் கண்டு திணறிப் போனாள்.
விரல்கள் நடுங்க லிப்ஸ்டிக்கை எடுத்து அவனிடம் நீட்ட, அவளது நாடியைப் பற்றி நிமிர்த்தியவன், செவ்விதழ்களுக்குச் சிவப்பு வண்ணம் பூசத் தொடங்கினான்.
கண்ணாடியில் தன்னைப் பார்த்தவள், “அய்யய்யோ! என்னப்பா, இவ்ளோ லிப்ஸ்டிக் போட்டு இருக்கீங்க.” எனப் பதறித் துடைக்கப் போக,
அதனைத் தடுத்தவன், “இல்லன்னா, உன் லிப்ஸ்ல இருக்குற என் பல்தடம் தனியாத் தெரியும் பரவாயில்லையா?” என்றான் குறும்பு மின்ன.
ASIN : B0DFX6XC8Y
Language : Tamil
File size : 395 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 324 pages