Price: ₹449.00
(as of Nov 11, 2024 16:06:19 UTC – Details)
கண் முன்னே இருக்கும் காதலியை ஊரெல்லாம் தேடும் காதலன்.
காதலிப்பது தன்னையில்லை என என்னும் காதலி
இவர்களிடையே காதல்
“உன் மனதில் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? தெரியாமல் தான் கேட்கின்றேன். இது ஒப்பந்த திருமணம் தானே தெரிந்து தானே சம்மதித்தாய்? இப்போது எதுக்கு இந்த நாடகம்?” சீறினான்.
ஸ்ரீனிகா விழித்தாள். இவனுக்கு என்ன நடந்தது.
இறுக பிடித்த கை வலிக்கவே “ஸ்…. வலிக்குது” வாய்க்குள் முனங்கினாள். அவள் கண்களையே ஆழ்ந்து பார்த்தவனுக்கு சிவந்திருந்த அந்த கண்களை பார்க்க அவள் நிஜமாகவே அழுதிருக்கின்றாள் என்பது புரிந்தது.
அவளை உதறி, தள்ளி நின்று கழுத்து பட்டியை தளர்த்திவிட்டவன் வாய் வழியே மூச்சுவிட்டு தன்னை தானே நிலைபடுத்தினான். அவனிடம் அப்பா பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவன் தள்ளிவிட்டதில் தடுமாறிய ஸ்ரீனிகா பல்கனி சுவரைப் பிடித்து தன்னை சமாளித்து நொந்து போய் பார்த்தாள்.
ஏன் எப்போதும் உதறித் தள்ளுகின்றான்.
“அப்பாவிடம் என்ன சொன்னாய்?”
வேகமாக தலையாட்டினாள் “எதுவும் சொல்லவில்லை. மாமா கோபமாய்….” அவள் வார்தையை முடிக்க முதல் சீறி விழுந்தான் “யாருக்கு யார் மாமா?” இரு தோள்களையும் பற்றி “மறுபடியும் சொல்கின்றேன், இது வெறும் ஒப்பந்த திருமணம், அதை நினைவில் வைத்து கொள். கேட்கும் போது விவாகரத்து கொடுத்து செல்ல வேண்டும். இந்த மாமா நோமா எல்லாம் வேண்டாம் புரிந்ததா?” கட்டளையாய் ஒலித்தது அவன் குரல்.
வேகமாய் தலையாட்டியவளை விட்டுத் திரும்பினான்.
“நான் நாளை கேரளா போகின்றேன்” மெல்லிய குரலில் கூறியவளை ஏளனமாய் நோக்கினான் “உனக்காக என்று தனியாக விமானம் எல்லாம் வாங்கி விட முடியாது”
ASIN : B0DHXTS6JK
Language : Tamil
File size : 2378 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 375 pages