Price: ₹300.00
(as of Jan 01, 2025 14:11:12 UTC – Details)
குளித்து முடித்து…மஞ்சள் நிற காட்டன் புடவையில் தயாராக….அவளைப் புடவையில் பார்த்த சுமதி வாயைப் பிளந்தாள்.
“ஐயோ அக்கா..!” என்று கத்த…
“என்னடி..” என்றாள் பதறி..
“ஐயோ அக்கா…சூப்பருக்கா..செம்ம அழகாயிருக்கக்கா…” என்று அவளைக் கட்டிக் கொண்டு ஆட..
“ஹேய் விடுடி..புடவை கசங்க போகுது..” என்று விலகினாள் மதி.
“மதி..! இந்தாம்மா மதிய சாப்பாடு..!” என்றபடி வந்த பார்வதியும் திகைத்து தான் நின்றார்.பல வருடங்களுக்கு பிறகு மகளை சேலையில் பார்க்கிறார். முன்பு பார்த்திருந்தாலும்…அது பருவம்.ஆனால் இப்போது..அவள் முகத்தில் தெரியும் கம்பீரம்,அறிவுக்கலை என அனைத்தும் அவளை அத்துணை அழகாய் காட்ட…கலங்கிய ஆனந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு…
“எல்லாத்தையும் சாப்பிட்டுடனும்..” என்றார்.
“சரிம்மா..! அப்பாவை இன்னமும் காணோம்..! “ என்றாள் வாசலைப் பார்த்து.
“இந்த மனுஷனுக்கு கொஞ்சமும் நினைவே இருக்காது..!” என்று பார்வதி புலம்ப..
“பரவாயில்லம்மா..நான் அப்படியே மெதுவா நடக்குறேன்..அப்பா வந்தா வர சொல்லுங்க..!” என்றபடி…கிளம்பிவிட்டாள் மதி.
“சூதானம்(பத்திரமாக) கண்ணு…” என்று பார்வதி ஆயிரம் சூதானம் போட்டார்.எல்லாத்துக்கும் சரி சரி என்று தலையை ஆட்டிக் கொண்டே நடந்தாள் மதி.
இரண்டு புறமும்..தோட்டம் துறவுகள் இருக்க..அதையெல்லாம் வேடிக்கை பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தாள் மதி.அவள் அப்பாவுடன் வண்டியில் சென்றிருந்தால் கூட இத்தனை இன்பமாய் இருந்திருக்காது…என்று எண்ணியபடியே நடக்க…எதிரே வந்த அவளின் இரண்டாவது பெரியம்மா திலகா…அவளின் நடை உடை கண்டு உள்ளுக்குள் எறிய…
“இதெல்லாம் ஒரு பொழப்பு…! ஹா..த்தூ..” என்று அவள் காது பட…பார்வைக்கு நேராக துப்ப…அதை கண்டு கொள்ளாமல் முன்னே சென்றாள் மதி.இருந்தாலும் மனதில் ஏதோ ஒன்று தடுக்க… திரும்பியவள்.. சொடக்கிட்டு அழைத்தாள் அவரை..
“என்னோட பொழப்புக்கு என்ன குறைய கண்டிங்க…? உங்க பொழப்புக்குத்தான் ஊரே சிரிக்குது போல…தேவையில்லாம என்னை சீண்டுற வேலை வேண்டாம்…பழைய மதி மாதிரி ஊ..ஊன்னு அழுதுட்டே போய்டுவேன்னு கனவுல கூட நினைக்காதிங்க..!” என்று சொன்னவள்…முறைத்துக் கொண்டு பட்டென்று திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.
திலகாவிற்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்தது.அது மதியின் முன்னேற்றத்தால் வந்ததா..? இல்லை அவளின் மாற்றத்தால் வந்ததா என்று தெரியவில்லை.
மனதில் இருந்த இனிமை..இருந்த இடம் தெரியாமல் மறைய..எதையோ யோசித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.
யோசனையுடன் நடந்து கொண்டிருந்தவளின் அருகில்…சரட்டென்று ஒரு வண்டி வந்து நிற்க..எதிர்பாரா சத்தத்தில்..”ஆஆ…அம்மா…” என்று பதறி விலகி நிமிர….அங்கே நின்றிருந்தான் அவன்.
அவளுக்கு அருகில்..ஆனால் அவளைப் பார்க்கவில்லை. கண்கள் நேராக ரோட்டைப் பார்த்துக் கொண்டு இருக்க…கைகள்..பைக்கை ரைஸ் செய்து கொண்டிருந்தது.வண்டியின் உறுமலோடு அவனின் மனமும் போட்டி போட்டதோ என்னவோ….முகமும் ரௌத்திரமாய் இருந்தது.
முன்னுச்சியில் ஆங்காரத்துடன் வந்து விழுந்த முடிகள்..பாறை போல் இறுகி இருந்த முகம்..முறுக்கேறியிருந்த கைகள்..வண்டியை மேலும் முறுக்க…
“வண்டியில் ஏறு” என்பதற்கு அடையாளமாய் அவன் நகராமல் அப்படியே நின்றான்.
அவனைக் கண்டு ஒரு நிமிடம் பயந்து விழித்தவள்…வரவைத்துக் கொண்ட தைரியத்துடன்…விலகி நடக்க ஆரம்பித்து விட்டாள்.ஆனால் மனதில் பயம் தலை விரித்தாடியது.
அவள் செல்ல செல்ல..அவன் வண்டியும் உறுமிக் கொண்டே செல்ல…ஒரு கட்டத்திற்கு மேல்..பொறுமை இழந்தவன்…விருட்டென்று கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.அவன் வண்டி ஏற்படுத்திய புழுதி மறைய சில நிமிடங்கள் ஆனது.
அவன் சென்ற பின்பு நிமிர்ந்தவள்….அங்கே அவனைக் கண்டு அதிர்ந்தாள்.ஆம்..விழிகள் இரண்டும் கோவைப் பழமாய் சிவக்க நின்றிருந்தான் அவன்.அவன் தான் மணி முகிலன்.
அவன் பார்த்துக் கொண்டே நிற்க..அவளுக்கு உடல் பயத்தில் நடுங்கியது.அவளை காப்பாற்ற…கடவுளாய் பார்த்து பஸ்சை அனுப்பி வைக்க…அவசர அவசரமாய் ஏறியவள்..ஒரு ஜன்னலோர சீட்டைப் பிடித்து அமர்ந்தாள்.நடுக்கம் குறையவில்லை.
சில வினாடிகளில்..பேருந்து கிளம்ப…”சப்பா…” என்று அவள் பெருமூச்சு விட…
அவ்வளவு சீக்கிரம் உனக்கு நிம்மதியா..? என்பதைப் போல்…அவள் அருகில் தோளோடு தோள் உரச.. பொத்தென்று அமர்ந்தான் மணி முகிலன்.
தன் அருகில் அமர்ந்தவனை இமைக்காது பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் மதி.ஆனால் அவனோ அவளை சட்டை செய்யாமல் அப்படியே அமர்ந்திருந்தான்.