Price: ₹99.00
(as of Sep 19, 2025 05:04:40 UTC – Details)
டாக்டர் நாகராஜ், சேகர் சொன்னதையெல்லாம் உன்னிப்பாய் செவிமடுத்துவிட்டுக் கேட்டார்.
“உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷம் இருக்கும்?”
“ரெண்டு வருஷம்…”
“குழந்தை இருக்கா…?”
“இல்லை…”
“எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம்… எடுத்துப் பார்த்துட்டு மத்த டாக்டர்ஸ் என்ன சொன்னாங்க…?”
“நார்மல்ன்னு சொல்லிட்டாங்க…”
“அந்த ரிப்போர்ட்ஸெல்லாம் வெச்சிருக்கீங்களா…?”
“இதோ…”
தன் கையிலிருந்த ப்ரெளன் கவரை நீட்டினான் சேகர். டாக்டர் நாகராஜ் அதை வாங்கிக்கொண்டே கேட்டார்.
“எங்கே எடுத்தீங்க…?”
“சாய் லாப்ரட்ரீஸ்…”
எக்ஸ்ரேக்களை வெளிச்சத்தில் அண்ணாந்து பார்த்துவிட்டு – ப்ளட், யூரின் ரிப்போர்ட்களை புரட்டினார். கடைசியாய் ஸ்கேனையும் பார்த்தபின் சேகரிடம் திரும்பினார்.
“எத்தனை நாளா இந்த வலி இருக்குன்னு சொன்னீங்க…”
“ஒரு மாசமா…”
“மென்ஸஸ் சைக்கிளிங் எப்படி…?”
“அதுல எந்த பிராப்ளமும் இல்லை டாக்டர்… சரியா இருபத்தெட்டு நாளைக்கு ஒரு தடவை பீரியட் வந்துடுது…”
“எந்த சந்தர்ப்பத்திலாவது நாள் தள்ளிப்போயிருக்கா…?”
“கல்யாணமான மூணாவது மாசம் ஒரு பத்து நாள் தள்ளிப்போயிருக்கு. இவ்வளவு சீக்கிரத்துல குழந்தை வேண்டாம்னு நினைச்சு… மாத்திரையை சாப்பிட்டு சரிபண்ணிக்கிட்டா…”
டாக்டர் பின்பக்கமாய் திரும்பிப் பார்த்து ‘சிஸ்டர்’ என்று குரல் கொடுக்க – பக்கத்து அறையினின்றும் ஒரு நர்ஸ் வெளிப்பட்டாள்.
“எஸ் டாக்டர்…”
“இந்தப் பெண்னை கூட்டிக்கிட்டு போய் உள்ளே இருக்கிற டேபிளில் படுக்க வை…” சொன்ன டாக்டர் சேகரிடம் திரும்பினார்.
“நீங்க ரெண்டு நிமிஷம் வெளியே இருங்க…”
சேகர் வெளியே போனதும் நர்ஸ் பரிமளாவை. அழைத்துக்கொண்டு போய் டேபிளின் மேல் படுக்கவைத்தாள். டாக்டர் நாகராஜ் ஸ்டெத்தை மாட்டிக்கொண்டு பக்கத்தில் வந்தார். நாடியைப் பிடித்தும் – கண்ணிமைகளை தாழ்த்தியும் பார்த்துவிட்டு கேட்டார்.
“உனக்கு என்ன வயசும்மா…”
“இருபத்தி மூணு…”
“கல்யாணத்துக்கு முந்தி இந்த வலி இருந்ததா?”
“இல்ல…”
“’குறிப்பா வலி எங்க இருக்குன்னு சொல்றியா?”
இடுப்பின் வலது பக்கத்தை தொட்டுக்காட்டினாள் பரிமளா. நாகராஜ் அந்த இடத்தை அழுத்திப்பார்த்துவிட்டு – “மென்ஸஸ் பீரியட் உள்ள நாளிலேயும் இந்த வலி இருக்கா…?”
இல்ல டாக்டர்…”
சாப்பிட்ட உடனே வாமிட் பண்ற உணர்ச்சி இருக்கா?”
“ஊ… ஹூ… ம்…”
“எந்திரிச்சு உட்காரம்மா…”
பரிமளா சிரமமாய் எழுந்து உட்கார்ந்தாள்.
“சிஸ்டர்! ஒரு ப்ரூடண்ட் இஞ்செக்க்ஷனை தயார் பண்ணு. வெளியே இருக்கிற இந்தப் பெண்ணோட ஹஸ்பெண்டையும் அப்படியே கூப்பிட்டு விட்டுடு…”
நர்ஸ் தலையாட்டிவிட்டு வெளியேபோக – அடுத்த நிமிஷம் சேகர் உள்ளே வந்தான். டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷனில் எதையோ கிறுக்கிக் கொண்டே அவனை புன்னகையோடு ஏறிட்டார்.
“பயப்படற மாதிரி எதுவுமே இல்லை…”
“அந்த வலி எப்படி வருது டாக்டர்…?”
“ட்யூ… டு… அடிஷன்…”
“அடிஷனா…? அப்படீன்னா…?”
“குடல் பகுதிகள் ரெண்டும் ஒண்ணோடு ஒண்ணு ஒட்டிக்கிட்டு கர்ப்பப்பைக்கு கீழே இருந்து ஒரு ப்ரஷரை கொடுக்கும் – அந்த ப்ரஷர் இடுப்புப் பகுதியில் இருக்கிற நுண்ணிய நரம்புகளை தாக்கும்போது – தாங்க முடியாத வலி உற்பத்தியாகும்.
சேகர் புன்னகைத்தான்.
“இதெல்லாம்… உங்களுக்கு எப்படி டாக்டர் தெரியுது?”
“ரிடிகுலஸ்! எப்படி தெரியுதா…? அதுக்குத்தானே நான் படிச்சிருக்கேன்…”
“என்னது…? நீங்க படிச்சிருக்கீங்களா…?
உங்க பேர்க்கு பின்னாடி இருக்கிற MBBS, MS, F.R.C.E., எல்லாம் நிஜமா நீங்க… படிச்ச படிப்பா…?”
நாகராஜ் முகம் சிவந்தார்.
“என்ன பேத்தறீங்க…?”
“நான் பேத்தலை… மிஸ்டர் நாகராஜ். உண்மையைச் சொல்றேன். நீங்க டாக்டர்க்கே படிக்கலை… கொச்சையா சொல்லப்போனா… நீங்க ஒரு போலி டாக்டர்… உங்க உண்மையான எஜுகேஷனல் க்வாலிஃபிகேஷன் பி.ஏ.எக்னாமிக்ஸ்…”
நாகராஜ் ஏதோ ஆவேசமாய் பேச முயல – பரிமளா புன்னகையோடு கையமர்த்தினாள்.
“நாகராஜ்! வீணா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணாதீங்க…! நானும் மிஸ்டர் சேகரும் போலீஸ் டிபார்ட்மெண்ட் க்ரைம் ப்ராஞ்ச் விஜிலென்ஸை சேர்ந்தவங்க. உங்ககிட்டே இப்படி தனியா பேசத்தான் கணவன் மனைவி மாதிரி வந்தோம்… எக்ஸ்ரே, ஸ்கேன், ப்ளட் ரிப்போர்ட், யூரின் ரிப்போர்ட்… எல்லாமே ஒரு செட்டப்தான்…”
“நோ…” – என்று கூறி வியர்த்து வழிந்த நாகராஜ் உறைந்து போய் அவர்களையே பார்த்தார்.
ASIN : B0FHGZV2X6
Publisher : Geeye Publications (13 July 2025)
Language : Tamil
File size : 1.5 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 83 pages
Best Sellers Rank: #12,481 in Kindle Store (See Top 100 in Kindle Store) #71 in Children’s Crime & Thriller (Kindle Store) #72 in Children’s Mysteries & Curiosities (Kindle Store) #1,394 in Crime, Thriller & Mystery (Kindle Store)
Customer Reviews: 4.1 4.1 out of 5 stars 6 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });