Price: ₹349.00
(as of Mar 16, 2025 01:25:00 UTC – Details)
இது suspense, thriller, horror, love and romance, மற்றும் emotional sentiment என்று அனைத்தும் நிறைந்த சுவாரஸ்யமான விறுவிறுப்பான கதை. Time machine, hypnotism, மற்றும் கூடு விட்டு கூடு பாயும் கலை என்று அனைத்தும் நிரம்பியது. கண்டிப்பாக அனைவரும் இரசிக்கும் படி இருக்கும்.
கதையில் இருந்து சில வரிகள் :
முகம் கழுவி விட்டு வெளியே வந்ததும் நேராக டைனிங் டேபிளுக்கு வந்தான். இனியாவும் தயாராக வைத்திருந்தாள்.
தட்டு எடுத்து வைத்து சூடான புலாவை பரிமாறினாள்.
“வா இனியா.. ரெண்டு பேரும் சேந்தே சாப்பிடலாம்”
“இல்லேங்க.. ஷோபி எந்திரிக்கிற நேரம். நீங்க சாப்பிட்டு முடிங்க. நான் சாப்பிட்றேன்”
இரண்டு வாய் சாப்பிடுவதற்குள் அவனுடைய அலைபேசியில் அழைப்பு வந்திருப்பதை ஒலி எழுப்பிக் கூறியது.
அலைபேசியை எடுத்து ஆராய்ந்த விஷால்..
“ஒன் மினிட் இனியா. ஆஃபீஸ்ல இருந்து வந்திருக்கு. இரு பேசிட்டு வந்துட்றேன்” என்று கூறி அலைபேசியை காதுக்குக் கொடுத்து “எஸ்” என்று கூறியவாறு நகர்ந்து வாசலுக்குச் சென்றான்.
அப்போது அங்கு மேஜை மேலிருந்த இனியாவின் அலைபேசி தன் ரிங்டோனை வெளியிட்டது.
இந்த நேரத்தில் யார் அழைத்திருப்பது என்கிற யோசனையுடன் சென்று டிஸ்பிளேயைப் பார்த்தாள்.
அதில் ‘விஷால்’ என்று இருந்ததைப் பார்த்ததும் அதிர்ந்து சிறிது நேரம் அதையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு வாசலில் நின்று ஃபோன் பேசிக் கொண்டிருந்த விஷாலைப் பார்த்தாள். தன்னுடைய போனில் வந்து கொண்டிருந்த விஷாலின் பெயரைப் பார்த்தாள்.
அவளுடைய இதயம் டொம் டொம் மென்று யாரோ போட்டு அடிப்பது போல் தாறுமாறாக துடித்தது.
பிறகு சட்டென்று தெளிந்து படபடக்கும் இதயத்துடன் கைகள் நடுங்க அலைபேசியின் அழைப்பை ஏற்று காதுக்குக் கொடுத்தாள்.
இவள் ஹலோ என்று கூட சொல்வதற்கு காத்திருக்காமல் எதிர்முனையில் அவசரமாக ஒலித்தது அந்தக் குரல்.
ASIN : B0DS1ZW429
Language : Tamil
File size : 570 KB
Simultaneous device usage : Unlimited
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 599 pages