Price: ₹100.00
(as of Dec 15, 2024 07:30:18 UTC – Details)
இது என்னுடைய ஐந்தாவது நாவல் நண்பர்களே.. குடும்பம், பாசம், நட்பு, காதல், குறும்பு, துரோகம், வலி.. அனைத்தும் கலந்த எதார்த்தமான காதல் கதை.. சில வரிகள்.. கதையில் இருந்து.. எவ்வளவு ஆசையாக திருமணம் செய்ய எண்ணி இருந்தேன்.. கண்ணில் காதலுடனும் மனதில் மகிழ்ச்சியுடனும், அனைத்தையும் சுக்கு நூறாக உடைத்து விட்டாயே.. அன்று கோபத்தில் மாலையிட்டாய், இன்று.. உன் கண்ணில் தெரிவது என்ன.. என்னை அடக்க நினைக்கும் உன் அடக்குமுறையா.. இல்லை.. உன் சகோதரனுக்காய் செய்யும் போலி நாடகமா.. நாடகம் தான் நான் உணர்ந்து கொள்கிறேன்.. நடிப்பது உனக்கென்ன புதிதா.. உன் கைபொம்மையாய் நீ என்னை ஆட்டுவிக்க.. என் மனமும் வெட்கமில்லாமல்.. உன்னையே எதிர்பார்க்கிறது.. இப்பொழுதாவது காதலாகி மாலை இட மாட்டாயா என்று..என அவளும் என்றுமே எனக்கானவள் நீதானடி .. அன்று கோபத்தில் உன்னை கரம் பிடித்திருந்தாலும்.. மனதில் ஏற்பட்ட நிம்மதியை எவ்வாறடி எடுத்துரைப்பேன்… உன்னை காயப்படுத்தியதில் என் இதயமும் தன்னிச்சையாய் காயப்பட்டதை புரிந்து கொள்ளடி பெண்ணே.. உன்னை காதலித்தவாறு போலியாய் நடித்தாலும்.. உன் மேல் கோபம் கொண்டு உன்னை ரணப்படுத்தினாலும், நீயே என் உயிரென்று எப்படியடி உணர வைப்பேன்.. அன்பை காட்ட தெரியவில்லையடி எனக்கு.. உன் கெண்டை மீன் விழி கொண்டு கற்றுக்கொடுத்து விடு கண்ணே.. உன்னை காதலில் திணற வைக்க காத்திருக்கிறேன்.. என அவனும் தவித்து, பின் நெஞ்சம் நிறைய காதலுடன் இணைவதே கதையின் கரு..