Price: ₹110.00
(as of Feb 02, 2025 02:45:37 UTC – Details)
“இதை நீங்க போட்டுக்கோங்க.” என்று சொல்லி ஆர்யன் கொடுக்க, அதை பிரிக்கும் வரை என்னவோ என்று நினைத்தவளுக்கு, அது தங்கத்தினால் ஆன மாங்கல்யம் எனப் பார்த்ததும் மீண்டும் ஒரு பய உணர்வு. கைகளின் நடுக்கம் அதை வெளிப்படையாய் கூற, அதைக் கண்டவன் நிமிர்ந்து திகழ்மதி முகத்தினைக் கண்டான்.
“ஹேய்! ஈசி ஈசி திகழ்! நம்ம கேரக்டர்ஸ்க்கு இது வேணும் தானே? சோ ஒன்லி!” என்றான் அவளின் வியர்த்த முகம் கண்டு.
‘அடப்பாவி! இது எப்ப டா பர்ச்சேஸ் பண்ணின?’ என்பதாய் இருந்தது புகழ் பார்வை.
“ஆமா தான்… ஆனா இது… கோல்ட் செயின்….“ என அவள் தயங்க,
“ஹ்ம்! கோல்ட்ல தானே பண்ணுவாங்க? “ என்றவன்,
“அக்ச்வல்லி இது எங்க குடும்ப வழக்கத்துல இருக்குற செயின் மாடல்.” என்றும் சொல்ல, தலையசைத்தவள் தயக்கம் புரிந்து வேறு புறம் திரும்பிக் கொண்டான். அதன் பின்னும் சில நிமிடங்கள் கழித்து அதை அணிந்து கொண்டவளுக்கு தான் மனதில் அழுத்தம் கூடிக் கொண்டே போனது யாரிடமும் பகிர முடியாத அளவிற்கு.
Agreement marriage
“டேய்! ஏன் டா இப்படியெல்லாம் பண்ற. அநியாயம் டா!” என்ற புகழ் புலம்பலில்,
“நான் என்ன டா பண்ணேன்?” என்றான் சாதாரணமாய் ஆர்யன்.
இதோ வீட்டு வாசலின் முன் ஆர்யாவும் புகழும் இறங்கி நிற்க, திகழ்மதி இன்னும் காரினுள்.
“என்ன பண்ணியா? வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்றவன் எவன் டா தங்கத்துல தாலி பண்ணுவான். அதுவும் குடும்ப வழக்கம்னு அம்புட்டு கரெக்ட்டா பார்த்து உங்கம்மா செயின் மாதிரியே வாங்கி குடுத்துருக்க. நேத்து மட்டும் தான டா நான் உன்னை பாக்கல. அதுக்குள்ள இந்த வேலையை எப்ப பார்த்த? அதுவும் நீ அந்த பொண்ணுக்கு ட்ராமா சொல்லி குடுக்குறதை எல்லாம் பாக்கும் போது நிஜமாவே ரெண்டு பேரும் ரொம்ப வருஷமா லவ் பண்ணி இந்த பிளான் பண்ணின மாதிரியே தோணுது!” என்று புகழ் அடுக்கிக் கொண்டே போக, ஆர்யனின் முகத்தில் புன்னகை.
“சிரிக்காத டா. எத்தனை திட்டு எத்தனை பேருகிட்ட வாங்கியிருக்கேன் தெரியுமா? அதை கூட விடு. எனக்கே அவ்வளவு கில்டியா இருந்தது நம்ம கல்யாணத்துக்காக இவன் வாழ்க்கையை சிக்கலாக்கி விட்டுட்டோமோனு. இப்ப நீ பண்றதை பார்த்தா தான் எனக்கு பயமா வருது.”
“புகழ்! பண்றதை தெளிவா பண்ணனும். மஞ்ச கயித்துல கட்டினா தான் தாலியா? அப்படி நம்ம வீட்லயோ இல்ல ரிலேட்டிவ்ஸ் யாராச்சும் போட்டு நீ பாத்துருக்கியா? இல்லைல? அதான் வாங்குனேன். அப்புறம் திகழ்கிட்ட சொன்னதும் அப்படி தான். நம்புற மாதிரி சொல்லணுமே!” என்றான் ஆர்யா விளக்கமாய்.
“நீ மத்தவங்க நம்புறதுக்காக சொல்ற மாதிரியும் செய்யுற மாதிரியும் இல்ல. அடேய் எப்பா! அந்த பொண்ணை நான் பத்திரமா ஒப்படைக்கனும் டா”
“இப்பவும் பத்திரமா தான் என்கிட்ட ஒப்படைச்சு இருக்க!” என்றதும்,
“டேய்!” என்ற புகழ் அதிர்ந்துவிட,
“எனக்கென்னவோ இப்ப கொஞ்சம் தோணுது நான் தேடின பொண்ணு திகழா இருக்குமோன்னு!” என்று சொல்லிக் கொண்டிருந்தவன் பேச்சு வாசலில் கேட்ட அன்னை சத்தத்தில் நின்றுவிட,
“இதுவும் என் கணக்கு தானா டா?“ என்ற புகழுமே தன் குழப்பம் அதிர்ச்சியை விழுங்கிக் கொண்டு வாசலைப் பார்த்தான்.
ASIN : B0DS1C5CN9
Language : Tamil
File size : 1564 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 303 pages