Price: ₹50.00
(as of Feb 11, 2025 20:43:49 UTC – Details)
இந்தியா சுதந்திரம் அடைந்துகொண்டிருந்த 1945-47இல் நடைபெற்ற புரட்சி இது. ‘புதிய இந்தியாவுக்கான காந்தியடிகளின் லட்சியக் கனவு’தான் அப்போது மக்கள் மனதை கவ்விப்பிடித்திருந்தது. காந்தியம் போதாது என்பதன் வெளிப்பாடுதான் இந்தப் புரட்சி. ‘புதிய இந்தியாவுக்கான டாக்டர் அம்பேத்கரின் லட்சியக் கனவும்’ ‘மார்க்சியத்தின் லட்சியக் கனவும்’ மக்களின் மனங்களை வெல்வதற்காகப் போராடிக்கொண்டிருந்த நேரத்தில், மார்க்சியத்தின் சிறப்பான எடுத்துக்காட்டுகளாக கோதாவரியும் பாருலேகரும் உயர்ந்து நின்றார்கள். சமூக மாற்றத்துக்கான பரிசோதனையாகவே அவர்கள் வார்லி ஆதிவாசிகளின் புரட்சியை வழிநடத்தியிருக்கிறார்கள். அதன் வெற்றி வலிமையான வேர்களோடு இன்றும் பசுமையாக இருப்பது சமூக ஊழியர்களுக்கான பாடம்.
ஆதிவாசிகளிடமிருந்து போராட்டத் தலைவர்களை உருவாக்குவதற்காக, கோதாவரியும் பாருலேகரும் நடத்திய அரசியல் வகுப்புகளின் அனுபவங்கள் காவியமானவை. அந்த வகுப்புகள் உருவாக்கிய தலைவர்கள்தான் நான்காம் தலைமுறையாக இன்றும் அங்கே கம்யூனிச இயக்கத்தின் அடித்தளமாக இருக்கிறார்கள் என்பது தற்செயல் நிகழ்வல்ல.
கோதாவரியின் காலத்தில் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் வளர்ந்து இன்று பெருநிறுவனங்களுக்கும் பழங்குடிகளுக்குமான போராக வளர்ச்சியடைந்துள்ளன. அதன் வெளிப்பாடுதான் பழங்குடி மக்களை ஆற்றல்படுத்துவதற்காக வாழ்ந்த கத்தோலிக்க மத குருவான 84 வயது ஸ்டான் சாமியை ஒன்றிய அரசு 2021இல் சிறையில் அடைத்து மரணமடைய வைத்த விவகாரம்.