
Price: ₹225.00
(as of Jul 15, 2025 07:42:10 UTC – Details)
சித்தார்த் அபிமன்யூ மெல்ல திரும்பி மணமேடையை பார்த்தான். மணமேடையை விட்டு எழுந்திருக்க கூடாது என்று புரோகிதர் சொல்லியிருந்ததால் அங்கேயே அமர்ந்து பார்வையை மட்டும் இங்கே வைத்திருந்தவள் நிறைய அழுதிருப்பாள் போலும், கண்ணீரில் அவள் போட்டிருந்த அதீத மேக்கப் எல்லாம் கலைந்து அவள் அழகை மேலும் அலங்கோலமாக்கி காட்டியது.
“அப்பா என்ன சொல்றீங்கனு புரிஞ்சு தான் பேசறீங்களா? நீங்க பேசறதை பார்த்த, என்னை மணமேடையில் உட்கார்ந்து தாலி கட்ட சொல்லுவீங்க போல இருக்கே. அவ வெறும் டிப்ளமா நர்சிங் தான் படிச்சிருக்கான்னு அவளை நம்ம ஆஸ்பிட்டல்ல நர்ஸ் வேலைக்கு எடுக்கவே யோசிச்சவன் நான். அவளை எனக்கு லைப் பார்ட்னரா ஒரு நாளும் என்னால ஏத்துக்கவே முடியாது. எல்லார் முன்னாடியும் உங்களை எதிர்த்து பேச வேணாம்னு தான் தனியா கூட்டிட்டு வந்தேன். என்னால அந்த பெண்ணை கல்யாணம் செய்துக்க முடியாது” என்றான் சித்தார்த் அபிமன்யூ தீர்மானமான குரலில்.
காட்சி 2
கணவன் சற்றுமுன் சொன்ன “என் பெண்டாட்டியை பார்த்துக்க எனக்கு தெரியும்” என்ற வார்த்தைகள் கொடுத்த நம்பிக்கையோடு, கண்களில் கனவுகளோடு, அந்த அறைக் கதவை மெல்ல தட்டினாள்.
“கம் இன்” என்ற அழுத்தமான குரல் கேட்டது, அந்த குரலில் தெரிந்த கடினத் தன்மையில் அவள் நெஞ்சுக்குள் திக்கென்று இருந்தது.
ஆபிஸ் அறையை தட்டும் ஊழியருக்கு, உள்ளே வரச்சொல்லி உத்தரவிடும் முதலாளியின் ஆணை போல தோன்றியது.
பின்னால் திரும்பி பார்த்தாள், என்ன என்று கேட்ட அப்பத்தாவிடம், “எனக்கு பயமா இருக்கு, நான் போக மாட்டேன்” என்றாள் பள்ளிக்கு செல்லும் சிறுமி போல.
கிளுக்கி சிரித்தவர்கள், “இப்போ இப்படி தான்டி சொல்லுவ, காலையில எவ்வளவு சீக்கிரமா வர்றேனு நாங்களும் பார்க்கிறோம், போடி உள்ளே” என்று அதட்டினார்கள் அந்த பெண்கள்.
படபடப்புடன் உள்ளே நுழைந்தாள், அவன் அவளுக்கு முதுகு காட்டி நின்றிருந்தான். அவள் பால் செம்பை வைத்து விட்டு, கதவை சாத்தி தாழ் போட்டாள்.
அவள் உள்ளே நுழைந்ததிலிருந்து, அவள் அசைவுகளை திரும்பாமலே உணர்ந்தாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல் இறுக்கமாக நின்றிருந்தான்.
நேத்ராவுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அவன் முதுகையே பார்த்து கொண்டு கைகளை பிசைந்தபடி நின்றிருந்தாள். அவன் திரும்புவது போல அவனிடம் அசைவு தெரியவும், சட்டென்று குனிந்து கொண்டாள்.
குனிந்து இருந்த அவளின் வதனம் முழுமையாக அவனுக்கு தெரியாவிட்டாலும், அவள் போட்டிருந்த அதீத மேக்கப்பை அவனால் பார்க்க முடிந்தது.
முகம் மற்றும் கழுத்துக்கு மட்டும் வெள்ளை அடித்திருக்கிறாளே, முழங்கைகளில் தெரியும் மாநிறத்தை மறைக்காமல் மறந்து விட்டாளோ? என்று ஏளனமாக பார்த்தான் சித்தார்த் அபிமன்யூ.
“இங்கே நடந்த திடீர் கல்யாணத்துல நான் குழம்பி போய் இருந்தா, இந்த நேரத்திலயும் இவ்வளவு மேக்கப்போட வந்திருக்காளே” என்று எண்ணியபடி அவளை நெருங்கினான்.
குனிந்திருந்தவளின் கண்களில் அவன் கைகள் தன்னை நோக்கி நீளுவது தெரிந்தது. ஒரு வித படபடப்புடன் கால்விரல்களை தரையில் அழுத்தியபடி, புடவை முந்தானையை முடிச்சிட்டு கொண்டிருந்தவளின் முகம் ரத்தமென சிவந்து கொண்டிருந்தது.
ஆனால் அவன் கைகள் தலையணையை அவளை நோக்கி நீட்டியது. யோசனையோடு அதை வாங்கியவள் கேள்வியாக அவனை நிமிர்ந்து பார்த்த போது, அவன் திரும்பி கொண்டான்.
“எனக்கு இந்த கல்யாணத்தில சுத்தமா விருப்பம் இல்லை. என் அப்பாவோட கட்டாயத்துனால தான் கல்யாணம் செஞ்சுகிட்டேன். எனக்கு நீ பொருத்தமா இருப்பேனு எனக்கு தோணல” என்று அவன் மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளின் தாக்கத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் உறைந்து போன நேத்ராவின் காதுகளில் “நீ எனக்கு பொருத்தமா இருப்பேனு எனக்கு தோணலை” என்ற வார்த்தைகளுக்கு பிறகு வேறு எந்த வார்த்தைகளும் அவள் காதுகளில் விழவில்லை. அதிர்ச்சியில் மொத்தமாக காது அடைத்துக் கொண்டது போல இருந்தது அவளுக்கு
ASIN : B0F4KVBGPR
Language : Tamil
File size : 447 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 403 pages

