Price: ₹2,099.00
(as of Jul 20, 2025 16:55:48 UTC – Details)
டீஸர்.. மீராவும் அரை மணி நேரத்தில் குளித்து தயாராகி வந்து இருந்தாள். டவலுடன் வந்தவளுக்கு அப்போது தான் அவள் மாற்று உடை பற்றி நினைவு வர.. கட்டில் மேல் அவளுக்கான உடை காத்து இருந்தது. உள்ளாடைகளும் ஒரு மெல்லிய கவுனும் இருந்தது. “சரியான எக்ஸ்ரே கண்ணு. எப்படி கரெக்ட்டா என் சைஸுக்கு வாங்கி வச்சு இருக்கான். பொறுக்கி!!”.. என்று மனதுக்குள் அவனை கரித்துக் கொண்டே உடை மாற்றி தயாராகினாள். அவள் கீழே வர.. மீரா வா ஃப்ளைட் க்கு நேரமாச்சு. ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டு போக சரியா இருக்கும்.”.. என்றான். சட்டென நினைவு வந்தவளாய்.. “ஏய்.. நீ எப்படி என் ரூமுக்குள்ள வந்த.. நான் தான் கதவை லாக் பண்ணி இருந்தேன் ல?”.. என்று அவள் யோசனையுடன் கேட்க. “பேபி.. இங்க எல்லாமே என் கன்ட்ரோல் ல தான் இருக்கும். நான் அந்த ரூமுக்கு வரணுமா வேணாமான்னு நான் தான் முடிவு எடுக்கணும். அந்த லாக் இல்ல!!”.. என்று அவன் ஒரு மாதிரி குரலில் சொல்ல. மீரா மனம் சோர்ந்து போனது. எல்லைகள் தாண்டி நான் எங்கும் வருவேன் என்று அவன் சொல்லாமல் சொல்கிறான் என்பது புரிந்தது. அவனிடம் மல்லுக் கட்ட மனம் இல்லாமல் சாப்பிட அமர்ந்தாள். எங்கு போகிறோம் என்று கேட்டால் நிச்சயம் பதில் வராது. என்று உணர்ந்து “எனக்கு என் ட்ரெஸ் எல்லாம் எடுக்கணும்”.. என்றாள் மீரா அவனிடம். “அது எல்லாம் ரொம்ப தேவைப்படாது”.. என்று சொல்லிய படியே ஆப்பிளை அவன் கடிக்க.. மீராவோ அதிர்ந்து.. “வாட்”.. என்று கேட்டே விட்டாள். அவள் தவிப்பை ரசித்தவன்.. “இல்ல.. எல்லாம் நான் ஆர்டர் கொடுத்து வாங்கி வச்சுட்டேன்.”.. என்றவன் அவளின் வளைவுகளை கண்களாலேயே அளவு எடுத்து.. “பெர்பெக்ட்டா வாங்கி இருக்கேன் இல்ல”.. என்று தன்னை தானே மெச்சிக் கொண்டான். மீராவை அவன் பார்வை வேறு கூச்சத்தில் நெளிய வைத்தது. “ஆமா ஆமா பெரிய சாதனை தான்”.. என்று அவள் சொல்லி அவள் பார்வையை திருப்பிக் கொள்ள. அவனும் சிரித்துக் கொண்டான். ஃப்ளைட்டில் பயணித்து.. ஹவாய் தீவில் இருவரும் இறங்கி இருந்தார்கள். அழகான கடற்கரை பகுதியில் இருந்த ஒரு ஆடம்பரமான ரிசார்ட்டில் தான் முன் பதிவு செய்து வைத்து இருந்தான். கண்ணைப் பறிக்கும் பச்சை பசேல் என்ற அழகான மலை முகடுகளும், எந்த கவலையும் இன்றி துள்ளி மோதும் அலைகடல் என்று இயற்கை எழில் அங்கு ஆர்ப்பரித்துக் கொண்டு இருந்தது. மீரா தன்னை மறந்து ரசித்து இருக்க. முகுந்தன் கண்களோ அவளைத் தான் ரசித்துக் கொண்டு இருந்தன. சட்டென அவன் பார்வையைக் கண்டவளுக்கு இத்தனை நேரம் இருந்த மனநிலை முற்றிலுமாக மாறிப் போனது. உனக்கு பசிக்குதா இல்ல ரூமுக்கு போகலாமா என்று அவன் கேட்க.. மீரா வேகமாக, “எனக்கு பசிக்குது. சாப்பிட்டு பீச்சை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டு போகலாமே என்றாள். அவள் மனம் புரிந்தவன் உள்ளுக்குள் சிரித்தபடி.. “சரி வா சாப்பிடலாம் என்று அழைத்துச் சென்றான். மீராவும் எவ்வளவு பொறுமையாக சாப்பிட முடியுமோ அவ்வளவு நிதானமாக சாப்பிட்டாள். இருவரும் கடற்கரையில் நெடுநேரம் நடக்க.. “மீரா போகலாம்”.. என்றான் அவன். “அதுக்குள்ளேயா?.. இன்னும் கொஞ்ச நேரம் நடக்கலாமே”.. என்றாள் தன் பதட்டத்தை முகத்தில் காட்டாமல். “எவ்வளவு நேரம் நடந்தாலும் இன்னைக்கு நீ எனக்கு வேணும் மீரா”.. என்றான் அவன் ஒரு மாதிரிக் குரலில். மீரா பிரேக் அடித்தது போல் நின்று விட்டாள். நேற்று என்ன என்னவோ சொல்லி தேற்றிய மனம் இப்போது மறுபடியும் அஞ்சி நடுங்கியது அவன் வார்த்தைகளில். இந்த அசுரன் எப்படியும் அவளை விடப் போவது இல்லை. அஞ்சியும் நடுங்கியும் சோர்ந்து போவதை விட ஒரு கல்லாய் இவனை சகித்துக் கொள்ளலாம். என்ற முடிவுக்கு வந்து இருந்தாள்.
ASIN : B0DK5XS92N
Language : Tamil
File size : 562 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 318 pages
Best Sellers Rank: #2,006 in Kindle Store (See Top 100 in Kindle Store) #33 in Drama & Plays (Kindle Store) #86 in New Adult & College Romance eBooks #88 in New Adult & College Romance
Customer Reviews: 4.2 4.2 out of 5 stars 81 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });