Price: ₹349.00
(as of Apr 12, 2025 13:01:03 UTC – Details)
“நீ இல்லாம என்னால வாழ முடியாது. நீ தானே டி சும்மா இருந்த என்னை காதல்னு உசுப்பேத்தி விட்ட. இப்போ அம்போன்னு விட்டுட்டு போற. நீ எனக்கு வேணும் டி” என்று கண்களில் கண்ணீர் மல்க, தன் முன்னே இருந்தவளின் கண்களை ஏக்கமாக பார்த்தபடி அவன் சொல்ல,
“கட்” என்று மைக்கில் கடுப்புடன் கத்தினான் ஆர்யன்.
அவனின் அலறலில், அந்த மொத்த ஷூட்டிங் ஸ்பாட்டே கதி கலங்கியது.
“முடிஞ்சது சோலி…” என்று மெதுவாக முணுமுணுத்தபடி, கேமரா மேன் தன் தலையில் கைவைக்க,
“யாரு டையலாக் எழுதிக் கொடுத்தா?” என்று, நின்ற இடத்திலேயே செட்டே அதிரும் அளவிற்கு கத்தினான் ஆர்யன்.
“நான்தான் சார்” என்று ஆர்யனின் உதவி இயக்குனரான வினயின் பின்னால், மறைந்து நின்றிருந்த ருக்மணி கையில் டையலாக் பேப்பருடன், மருட்சியுடன் வெளியில் வந்தாள்.
“யார் நீ..?” என்று அவன் கத்த,
“நேத்து ஜாயின் பண்ண நீயூ அசிஸ்டெண்ட் டைரக்டர் சார்…” என்று தடுமாறினாள்.
‘இவ தான் அவன் ரெக்கமென்டேஷனா!’ என்று மனதில் கடுகடுத்தவனோ,
“உன்னை யாரு இடியட், டையலாக்ஸை எழுத சொன்னா?” என்று மேலும் கத்தினான்.
“நான் தான் சார் ஆசைப்பட்டு எழுதுனேன்” என்று தயக்கத்துடன் சொல்லி முடித்தாள்.
“நீ ஆசைப்பட்டு எழுத, இதென்ன உன் அப்பன் படமா” என்று கர்ஜித்தபடி எழுந்தவன், அவளின் அருகே வேகமான நடைகளுடன் வர, அனைவருக்குமே அந்த சூழ்நிலையை எண்ணி அச்சம்.
ASIN : B0F1DVXK56
Language : Tamil
File size : 243 KB
Text-to-Speech : Not enabled
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled