
Price: ₹295.00
(as of Nov 26, 2025 07:03:59 UTC – Details)

அறையின் உள்ளே நுழைந்ததும், முதலில் அவன் கண்ணில் பட்டது அந்த ஊஞ்சல் நாற்காலிதான்!
எல்லா உணர்வுகளையும் மீறி, மனதில் ஒரு இதம் படர, ஒரு கணம் விழிகளை மூடி நின்றான்.
அவன் மனைவி அவனை வெறுத்து ஒதுக்கி வந்து விடவில்லை. அவனைப் போலவே அவளும் அவனின் நினைவுகளோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்!
சட்டென்று மனம் லேசாக மனைவியை ஏறிட்டான். தன் பார்வையை உணர்ந்து அவள் தலையைத் திருப்பிக் கண்டதைக் கண்டதும், அவன் மனம் மீண்டும் முறுக்கிக் கொண்டது.
‘ராட்சசி!’ என்று முணுமுணுத்த படி அவனும் திரும்பிக் கொண்டான்.
****
உறங்குவது போல நடித்துக் கொண்டிருந்த விக்ரம் எழுந்து அமர்ந்தான்.
பார்த்த நொடியில் இருந்து, மனைவியைத் தன் அணைப்பில் வைத்திருக்க வேண்டும் என்று பரபரத்த மனத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவ்வளவு எளிதாக இல்லை. அவன் கோபம் முழுமையாக தணியும் வரை, அவனால் இயல்பாக நடந்து கொள்ள முடியுமென்று தோன்றவில்லை.
அவளும் தான் தானாக எதையாவது பேசுகிறாளா? முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு அவனைப் பார்ப்பதோடு சரி.
அவனாக பேச ஆரம்பித்தால், தன்னுடைய இத்தனை நாள் தவிப்பையும், ஆதங்கத்தையும், கோபத்தையும் அடக்க இயலாமல் போய் விடும். நிறை மாத கர்ப்பிணியாக இருப்பவளை, எவ்விதத்திலும் வருத்தப்பட விடக் கூடாது என்ற எண்ணத்தில் அமைதியாக இருக்க முயன்றாலும், மனம் கொந்தளித்து கொண்டுதானிருந்தது.
குழந்தை வந்த பிறகும் தன்னைத் தொடர்பு கொள்ள அவள் முயலாததே அவன் மனதை வெகுவாகக் காயப்படுத்தி இருந்தது. ‘அப்படி என்ன தவறு செய்தேன்?’ என்ற கேள்விக்கு விடை புரியாமல், அவள் முகத்தையே பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தான்.
சற்று நேரத்தில் அவள் உடலில் ஒரு அசைவு ஏற்பட்டதை உணர்ந்தான். உறக்கத்திலேயே அவளுடைய ஒரு கரம் அவள் வயிற்றில் படிவதைக் கண்டவனுக்கு, ஆர்வம் தலைதூக்க, அவனையும் அறியாமல் ஒரு கரத்தை அவள் வயிற்றில் வைத்தவனின் உடலில் ஒரு சிலிர்ப்பு ஓடியது.
குழந்தை அசைகிறது! சட்டென்று உணர்ச்சிப் பெருக்கில் கண்களில் நீர் கசிய, மென்மையாக அவள் வயிற்றை வருடியவனின் கரத்தைப் பற்றிக் கொண்டாள் அவன் மனைவி!
திடுக்கிட்டவனாக அவன் அவள் முகம் பார்க்க, அவள் உறக்கத்தில் தான் இருந்தாள். ஆனால், அவள் முகத்தில் மெல்லியப் புன்னகை உறைந்திருந்தது. கண்ணெடுக்காமல் அவன் பார்த்திருந்த நேரத்தில், “பாப்பா அசையுது விக்ரம்.” என்று முணுமுணுத்தது அவள் இதழ்கள்!
ஒரு கணம் அவன் உடலில் எவ்வித அசைவும் இல்லை! உறைந்து போய் அமர்ந்திருந்தான். இது இன்றில்லை! எப்போதுமான நடைமுறை என்று அவனால் முழுமையாக உணர முடிந்தது.
காரணம் புரியா விட்டாலும், அவன் மனைவி அவனை வெறுத்து ஒதுக்கி விட்டு பிரியவில்லை என்பது வெகு நிச்சயமாக அவனுக்கு புலனானது அந்த கணத்தில் தான்!
ASIN : B0CST6W1PZ
Language : Tamil
File size : 927 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 384 pages
Best Sellers Rank: #28,918 in Kindle Store (See Top 100 in Kindle Store) #404 in Clean & Wholesome Romance eBooks #440 in Clean & Wholesome Romance (Books) #582 in Workplace Romance eBooks
Customer Reviews: 4.4 4.4 out of 5 stars 82 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });
