Price: ₹349.00
(as of Mar 21, 2025 06:19:15 UTC – Details)
பெண்களை வெறுக்கும் கதையின் நாயகன். சந்தர்ப்பவசத்தால் ‘ஒப்பந்தத் திருமணம்’ என்கிற பெயரில் அவனுடைய வாழ்க்கைக்குள் நுழைகிறாள் நாயகி.
ஒப்பந்தக் காலம் முடிந்து நாயகி அவனை விட்டுப் பிரியும் போது தான் நாயகன், அவள் மேல் கொண்ட காதலை உணர்கிறான்.
ஆனால் நாயகியோ அவனை அடியோடு வெறுக்கிறாள். அவளை எப்படி தன் மேல் காதல் கொள்ள வைக்கிறான் நாயகன்? இருவரும் இணைகிறார்களா?
கதையோடு பயணிக்கலாம் வாருங்கள்!
கதையில் இருந்து சில வரிகள்:
“பை பேபி!” என்று மேகாவிடம் சொல்லி விட்டு வெளியே வந்தவனை வாசலில் தடுத்து நிறுத்தினாள் மேகா.
“எக்ஸ்கியூஸ் மீ!” என்று கை விரலில் சொடுக்கு போட்டு அழைத்தாள்.
கையில் இருந்த கூலர் கண்ணாடியை கண்களில் மாட்டிக் கொண்டே “எஸ்” என்று திரும்பினான் பிரியன்.
“இப்ப அம்மா கிட்ட என்ன சொன்னீங்க? திரும்பச் சொல்லுங்க”
“எஸ்.. நான் இங்க இருந்து போறப்ப உன்ன கூட்டிட்டு தான் போவேன் மேகா. நீ இல்லாம நான் இங்க இருந்து போக மாட்டேன்”
“அப்ப இந்த ஜென்மம் பூராவும் நீங்க இங்கேயே இருக்க வேண்டியது தான்”
“அதையும் தான் பார்ப்போம்”
“என்ன சேலஞ்ச் பண்றீங்களா?”
“அப்படியே தான் வச்சுக்கோ” என்று சொல்லி விட்டு தன் வீட்டினுள் நுழைந்தான் பிரியன்.
“அதையும் தான் பார்க்கிறேன்.. எப்படி என்னை கூட்டிட்டு போறீங்கன்னு”
கதவை மூடாமல் நின்றிருந்தவன்..
“என்ன நீ சேலஞ்ச் பண்றியா?”
“அப்படியே தான் வச்சுக்கோங்க”
இருவரும் அவரவர் வீட்டினுள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டார்கள்.