Price: ₹308.00
(as of Jul 02, 2025 08:04:49 UTC – Details)
Hi Friends!
‘வலசை போகும் பறவைகளாய்…’ என்ற எனது இந்த நாவலைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இங்கே வாசகர் அனைவரும் விரும்பி கேட்கும், ‘ஹீரோ ஹீரோயினுக்கு கல்யாணம் ஆகி பிரிஞ்சிருக்கணும், அவங்களுக்கு குழந்தை இருக்கணும்… ஆனா ஹீரோவுக்கு தெரியக் கூடாது’ என்கிற one Line… சரியாகச் சொன்னால் ஒரு ஏடாகூட Template அடங்கியுள்ள ஒரு கதைதான், ஆனால் எனது பாணியில்.
இப்படி எழுதவேண்டும் என்றெல்லாம் முடிவு செய்து எழுதவில்லை. எழுதும்போது இப்படி வந்துவிட்டது. இந்தக்கதை நிச்சயம் வாசகர்களைக் கவரும் என நம்புகிறேன். உங்கள் கருத்துகளை பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!
நட்புடன்,
KPN
Some Snippets for Sample.
“ஆங்… குடிக்கற தண்ணி காலி ஆயிடுச்சு. பதினோரு மணிக்கு ஆர்-ஓ தண்ணித் திறந்து விடுவாங்க. மறக்காம போய் பிடிச்சிட்டு வந்துடு என்ன” என்று கட்டளையிட்டு அவன் தலையசைப்பைக் குறித்துக்கொண்டே கிளம்பியவளின் கண்களில் தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கட்டைப்பைகள் பட, “இது சூர்யா சார் இருக்கற ஃபிளாட்ல வீ-டென் காரங்க வீட்டுத் துணிதான? அங்கதான போறேன். நானே கொடுத்துடறேன்” என்று அதை கைகளில் எடுத்துக்கொண்டாள்.
இதையே அவன் சொல்லியிருந்தால் அவன் மீது பாய்ந்திருப்பாள். நல்லவேளையாக அவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க தேவியின் திருவருள் தானாகவே கிட்டிவிட்டது. அதை எண்ணி உதட்டில் மலர்ந்த அவனது கீற்றானப் புன்னகை அவளுடைய முகம் பார்த்ததும் பெரிதாக விரிய, டிவிஎஸ் ஃபிப்டியின் சாவியை அவளிடம் நீட்டினான் சீனு. அந்தப் புன்னகையின் பொருள் புரிந்ததால் உண்டான உவகையுடன், “போ மாமா நீயி” என்றவாறு முகம் சிவக்க உதட்டுக்குள் மறைத்த புன்னகையுடன் அங்கிருத்து அகன்றாள் அஞ்சு.
*****
ஆசை ஆசையாகத் தாய் மண்ணில் வேரூன்ற வந்தவளை ‘ஏண்டா இங்கத் திரும்பி வந்தோம்?!’ என்று நினைக்க வைத்துவிட்டான்.
இலண்டனிலிருந்த வரை ஊசி முனை அளவுக்குக் கூட அவனிடம் இப்படி ஒரு ஏக்கம் எட்டிப்பார்க்கவில்லையே! ‘ஐம் எ சிங்கிள் பேரன்ட் சைல்ட்!’ என வெகு இயல்பாகச் சொல்லிக்கொண்டிருந்தவன் இங்கே வந்த சில நாட்களிலேயே தன் பிறப்புக்குக் காரணமானவனைக் கேட்டு நச்சரிக்கத் தொடங்கிவிட்டானே! அடுத்தவர் வாழ்கையில் மூக்கை நுழைக்கும் கலாச்சாரம் நம் நாட்டில் சற்று ஆழமாகவே வேரூன்றி இருப்பதன் அடையாளமல்லவா இது!
அவளுடைய அப்பாவாலேயே அவனை சமாளிக்க இயலவில்லை எனும்போது யாரால் முடியும்?!
அதற்கு சரணை இவளுக்குக் கொடுத்த அவனுடைய தகப்பன்தான் வரவேண்டுமோ?! தனகென்று வேறு ஒரு வாழ்கையை அமைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பவன் இவனுக்காக வருவானா? வரக்கூடியவன்தான்! ஒருவேளை வந்தாலும் வரலாம்தான்! ஆனால் இதற்காகவா இவ்வளவு போராட்டமும் தனிமைத் துயரும்?!
*****
கண்களில் திரண்ட கண்ணீருடன் சில நொடிகளுக்குள் தோன்றிய பதற்றமும், ஒரு உயரமான அந்தஸ்துடன் தன் எதிரே தோரணையாக உட்கார்ந்திருப்பவளிடம் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளலாமா வேண்டாமா என்கிற பெரிதொரு தயக்கமும் அவளிடம் அப்பட்டமாக வெளிப்பட, அவள் தன்னை அடையாளம் கண்டுகொண்டது குயிலிக்கும் விளங்க, அவசரமாக அவள் முகத்தை மேலும் ஆராய்ச்சியுடன் பார்க்கவும் அவளுடைய கூர்மையான மூக்கில் அமர்ந்து ஒளி வீசிய மூக்குத்தி அவள் யாரென்பதை குயிலிக்கு நன்றாகவே புரிய வைத்துவிட்டது.
*****
இல்லை…
இனி இந்த ஊரில் வசந்தகுமார் சார் இல்லை…
உயிர்த் தோழி குயிலி இல்லை…
அன்னையைக் காட்டிலும் அன்பைப் பொழியும் கற்பகம் அம்மா இல்லை…
எதிர்கால கல்விக்கான உத்தரவாதம் இல்லை…
ஏன் எதிர்காலம் என்ற ஒன்றிற்கே கூட உத்தரவாதம் இல்லைதானோ?
பாவாடையைத் தூக்கிச் சொருகியபடி பாண்டி விளையாடியதும்…
புளியங்கொட்டை சலசலக்கப் பல்லாங்குழி விளையாடியதும்…
உத்தி… உத்தியாய் தேடித்தேடி கூழாங்கல் சேர்த்துவைத்து கல்லாங்காய் விளையாடியதும்…
கொடுக்காப்புளிக்காய்… பிஞ்சு வேர்க்கடலை… ஒட்டு மாங்காய்… நெல்லிக்காய்… புளியங்காய், தோலோடு பாதாம் பழம் எனப் பொறுக்கி வந்து போட்டிப்போட்டுத் தின்றதும்…
மரத்தையே மொட்டையாக்கி மருதாணி பறித்து வந்து மாங்குமாங்கென்று அரைத்துப் பூசிக்கொண்டு திரிந்ததும்…
மூன்று பெண்களுக்கும் இனி வெறும் கடந்த கால நினைவுகளாய் மட்டும்தானோ?
*****
ASIN : B0BBGNV9F3
Language : Tamil
File size : 413 KB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 321 pages